தென்கொரியாவின் பியோங்செங் நகரில் அமைக்கப்பட்டுள்ள குளிர்கால ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகில் பாரிய தீ பரவியுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தென்கொரியாவின் பியோங்செங் நகரில் இன்று ஆரம்பித்துள்ளது.
இந்த போட்டிகள் இன்று ஆரம்பித்துள்ள நிலையில்இ அங்குள்ள ஒலிம்பிக் கிராமத்துக்கு அருகில் உள்ள தொடர்மாடி கட்டிடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் பாரிய புகைமண்டலம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க விழாவில் எந்தவொரு சிக்கலும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தற்போது அமைக்கப்பட்டுவரும் தொடர்மாடி குடியிருப்புக்கு அண்மையில் உள்ள உணவகமொன்றில் தீ பரவியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரிய வீரஇ வீராங்கனைகள் பங்கேற்பதால்இ சுமார் 1200 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment