தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து மாவை சேனாதிராஜாவிடம் கேள்வி கேட்ட குடும்பஸ்தர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு அளவெட்டி கும்பிளான் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தாக்குதலுக்கு உள்ளான பரமலிங்கம் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது:-
நேற்றைய கூட்டத்தில் மாவை சேனாதிராஜா உரையாற்றிக் கொண்டிருக்கும் போது குறித்த குடும்பஸ்தர் கையை உயர்த்தி மாவை சேனாதிராஜாவுடன் பேச அனுமதி கோரியுள்ளார். அதற்கான அனுமதியனையும் மாவை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அரசாங்கத்திற்க ஆதரவு வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இதுவரை எதை முழுமையாக செய்து முடிக்க முடிந்தது? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மாவை மீள்குடியேற்றம், மக்களுக்கான வீட்டுத்திட்டம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து படித்த பட்டதாரிகள் வேலையில்லாமல் கஸ்ரப்படும் நிலையில் அரசியல் செல்வாக்கினால் பலருக்கு வேலை பெற்றுக் கொடுத்தமை முறையா? எனவும் கேள்வி எழுப்பினால்.
இதற்கு பதிலளிக்காத மாவை சேனாதிராஜா கூட்டம் முடிந்த பின்னர் பேசுவோம் என்று கூறியுள்ளார்.
இருப்பினும் கூட்டம் முடிந்த பின்னர் இரு பொலிஸ் பாதுகாப்புடன் மாவை வாகத்தில் ஏறிச் சென்றுவிட்டார்.
இதன் பின்னர் வீடு திரும்பிய குறித்த குடும்பஸ்தர் மீது இருவர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலைத்தில் முறைப்பாடு எவையும் பதிவு செய்யப்படவில்லை.

Post a Comment