கண்காணிப்பை தீவிரப்படுத்த சீன ராணுவம் முடிவு. - Yarl Voice கண்காணிப்பை தீவிரப்படுத்த சீன ராணுவம் முடிவு. - Yarl Voice

கண்காணிப்பை தீவிரப்படுத்த சீன ராணுவம் முடிவு.

கண்காணிப்பை தீவிரப்படுத்த சீன ராணுவம் முடிவு.
கண்காணிப்பை தீவிரப்படுத்த சீன ராணுவம் முடிவு.
தென்சீனக்கடல் பகுதியில் சீனா அதிக அளவில் நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்தி கண்காணிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தென் சீனக்கடல் பகுதி ஐரோப்ப-ஆசிய நாடுகளை இணைக்கும் முக்கியமான கடல் வழி என்பதால், சர்வதேச நாடுகள் இந்தப் பகுதி வழியாகவே கப்பல்போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.


இந்நிலையில், இந்தப்பகுதியில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் ஏற்கனவே சீனா போர் கப்பல்களை நிறுத்தியுள்ளது. மேலும், தற்போது நீருக்கடியில் நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்தி பாதுகாப்பு சுவரை பலப்படுத்த சீன ராணுவம் முடிவு செய்துள்ளது.

இது சர்ச்சைக்குரிய ஹெய்னான் நீரிணையை மீண்டும் சொந்தம் கொண்டாடும் நோக்கில் சீனா மேற்கொள்ளும் விபரீத முயற்சி என சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post