யாழில் த.தே.கூவிற்கு பின்னடைவு ஏற்றுக் கொள்ளும் சுமந்திரன் - Yarl Voice யாழில் த.தே.கூவிற்கு பின்னடைவு ஏற்றுக் கொள்ளும் சுமந்திரன் - Yarl Voice

யாழில் த.தே.கூவிற்கு பின்னடைவு ஏற்றுக் கொள்ளும் சுமந்திரன்

இதுவரை வெளியாகியுள்ள தகவலின்படி 40 சபைகளிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னிலைக் கட்சியாக திகழ்கிறது. குறிப்பாக இச் சபைகளில் அதிகூடிய ஆசனங்களை பெற்ற கட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் வெளியாகியுள்ள முடிவுகளை பார்க்கும் போது, இவை மிகப் பெரிய ஒரு வெற்றி என்றே சொல்ல வேண்டும். தெற்கிலே பெரிய ஒரு சூறாவளி இடம்பெற்றுள்ளது. இதன்படி பாரிய மாற்றம் ஒன்று அங்கு ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச தலைவராக கொண்ட பொதுஜன பெரமுன கட்சி பெரும்பாலான சபைகளை கைப்பற்றியுள்ளது.

இப்பொழுது ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் மிக மோசமாக தோல்வியடைந்துள்ளன. இவ்வாறான சூழ்நிலையிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு 40 சபைகளில் முன்னணியில் வந்துள்ளமை மிகப் பெரும் சாதனையாக கருத வேண்டும்.

இச் சாதனை வெற்றி தொடர்பில் தூதரக அதிகாரிகள், உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விசேடமாக கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய 7 மாவட்டங்களில் ஏனைய கட்சிகளை விட சற்று கூடுதலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்குளை பெற்றுள்ளது.

ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில், இம்முறை எமக்கு கிடைத்த வாக்குகள் குறைந்துள்ளன. சபைகளை பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தில் உள்ள 17 சபைகளில் 13 சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகூடிய உறுப்பினர்களை கொண்ட கட்சியாக வந்துள்ளோம்.

இரண்டு சபைகளில் ஈ.பி.டி.பி முன்னணியிலும், வேறு இரண்டு சபைகயில் அகில இலங்கை தமிழ் காங்ரஸ் கட்சியும் பெற்றுள்ளது.
யாழின் முடிவுகளை பார்க்கும் போது மிகுதி 7 மாவட்டங்களின் முடிவுகளை விட சற்று வித்தியாசமானதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

விசேடமாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூடிய வாக்குகளை சில சபைகளில் பெறக்கூயதாகவும், 2 சபைகயில் முன்னணி வகிக்கிகக் கூடியததாக மாறியிருப்பது ஒரு முக்கியமான மாற்றமாகும் எற்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post