அரசாங்கம் தற்போது குழப்பமடைந்துள்ள நிலையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு பிரதமர் பதவியை வழங்குவது பொருத்தமற்ற விடயம் என பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை குறித்து தீர்மானம் எடுக்க முடியாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழப்ப நிலையில் உள்ளார். நாட்டிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் நாடு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துள்ள நிலையில் பிரதமர் பதவி தொடர்பான தீர்மானம் பொருத்தமற்றது என பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலாந்த விதானகே தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேரதல் பிரதேச ரீதியில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்குப் பதிலாக தேசிய அரசாங்கத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பிரதமர் பதவி நிலையே பாரிய சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது .
இந்நிலையில் குறித்த பிரதமர் பதவிக்கு நல்லாட்சி அரசாங்கம் நிமல் சிறிபால டி சில்வாவை பரிந்துரை செய்துள்ளமை சாத்தியமற்றதாக காணப்படுகின்றது. உள்ளூராட்சி சபைகளின் பிரதான நோக்கம் பிரதேச அபிவிருத்தியை மேம்படுத்துவதாகும். ஆனால் குறித்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசாங்கத்தில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்துவதில் குறித்த கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.
பிரதமர் பதவி குறித்து யாரை நியமிப்பது என்பது தொடர்பில் நாட்டு தலைவர் குழப்பம் அடைந்துள்ள நிலையில் கட்சிகள் தமது அரசியல் நலனை மாத்திரம் கருத்திற் கொண்டு செயற்படுகின்றன. பிரதமர் பதவிக்குப் பக்கச்சார்பான பரிந்துரைகளை மேற்கொள்வது தற்போதைய அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரிக்கின்றது. பிரதமர் பதவிக்கு பரிந்துரைகளை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் வெளிப்படையாக தேசிய நலனில் அக்கறையுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி திரைமறைவில் பல்வேறு சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

Post a Comment