ஓவியாவுடன் சிம்பு! காதலர் தினத்தில் ஆச்சரிய அறிவிப்பு |
90ml' என்ற டைட்டிலில் உருவாகும் படத்தில் ஓவியா நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அனிதா உதீப் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'குளிர் 100' என்ற படத்தை கடந்த 2009ஆம் ஆண்டு இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்கின்றார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை நிவிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. அதில் ஓவியா ஒரு கையில் பன் மற்றும் இன்னொரு கையில் டீ வைத்து போஸ் கொடுத்துள்ளார். காதலர் தினத்தில் ஓவியா மற்றும் சிம்பு இணைந்து பணியாற்றும் திரைப்படத்தின் அறிவிப்பு இருதரப்பு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
Post a Comment