தேசிய நிலைப்பாட்டுடன் உள்ள காட்சிகள் ஒன்றுபட வேண்டும் -சிறீகாந்தா- - Yarl Voice தேசிய நிலைப்பாட்டுடன் உள்ள காட்சிகள் ஒன்றுபட வேண்டும் -சிறீகாந்தா- - Yarl Voice

தேசிய நிலைப்பாட்டுடன் உள்ள காட்சிகள் ஒன்றுபட வேண்டும் -சிறீகாந்தா-

தேசிய நிலைப்பாட்டுடன் உள்ள காட்சிகள் ஒன்றுபட வேண்டும் -சிறீகாந்தா-
தமிழ்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் எ ன கூறியிருக்கும் ரெலோ அமைப்பின் செயலாளர் என்.சிறீகாந்தா, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெல்வதற்கும், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்குமே தமிழ்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் ஒன்றிணைவேண்டும் என்றார்.

யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்:-

தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொ ண்ட கட்சிகள் பொது வேலைத்திட்டம் ஒன்றினடிப்படையில் ஒன்றிணையவேண்டும். இது
காலத்தின் கட்டாயமாகும்.  தமிழ்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளுக்கிடையில் வேறு விடயங்களில் முரண்பாடுகள் இருப்பினும், தமிழ் மக்களின் அரசியல் உரிமை விடய த்தில் முரண்பாடுகள் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.



எனவே தமிழ் மக்களின் அரசி யல் உரிமைகளை வெற்றெடுப்பதற்கும், காணாமல்போனவர்கள் பிரச்சினை, அரசியல்
கதிகள் பிரச்சினை, மற்றும் மீள்குடியேற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் தீர்வை பெறுவதற்கும் தமிழ்தேசிய நிலைப்பாட்டினை கொண்ட கட்சிகள் ஒன்றிணையவேண்டும்.

நாங்கள் பிரிந்து நின்று இயங்குவதால் பெரும்பான்மையின கட்சி கள் தமிழ் மக்களுடைய பகுதியில் காலுன்ற தொடங்கியிருக்கின்றன. ஆகவே பொது வே
லைத்திட்டம் ஒன்றினடிப்படையில் நாம் ஓன்றிணையவேண்டும் என்றார். தொடர்ந்து இந் த பொது வேலைத்திட்டத்தின் கீழ் கருணா, டக்ளஸ் போன்றவர்கள் இணைக்கப்படுவார் களா? என கேட்டபோது அவர்களும் இணைக்கப்படலாம் என்றார்.

தொடர்ந்து தமிழ்தே சிய மக்கள் முன்னணி யாழ்.மாநகரசபையில் ஆட்சியமைக்க இரகசிய வாக்கெடுப்பினை கோருவது தொடர்பாக கேட்டபோது, யாழ்.மாநகரசபையில் ஆட்சியமைக்க தமிழ்தேசிய மக்கள் முன்னணி இரகசிய வாக்கெடுப்பை கோருவதால் எங்களுடைய கட்சிகளை சேர் ந்த சிலர் தமக்கு ஆதரவு வழங்குவார்கள் என அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் அ து வெறும் கனவு மட்டுமே. அந்த கனவை அவர்கள் கலைத்து விடுவது நல்லது. மேலும் எங்களுடைய கட்சியில் மந்தைகள் எவரும் இல்லை என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post