மைத்திரியும் ரணிலும் இறுதி உடன்படிக்கை! - Yarl Voice மைத்திரியும் ரணிலும் இறுதி உடன்படிக்கை! - Yarl Voice

மைத்திரியும் ரணிலும் இறுதி உடன்படிக்கை!

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சிக்கலுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைமையை சீர்செய்ய ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பெரும்பான்மைப் பலத்துடன் அரசாங்கமொன்றை அமைக்க ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அரசாங்கத்தில் பங்காளிகளாகவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியுடன் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 43 உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் ஐக்கிய தேசியக் கட்சியுடனும், மற்ற தொகுதி கூட்டு எதிர்க் கட்சியுடனும் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Previous Post Next Post