தற்போது நடித்துக்கொண்டிருக்கும் மற்றும் வெளிவரவிருக்கும் படங்களோடு திரையுலகில் இருந்து விலகவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக்கழகத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த கமலஹாசன்இ அங்கு ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள கமல்ஹாசன்இ
‘தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் பங்கிட்டு கொள்ளும் அளவிற்கு திரைப்படங்கள் எதுவும் இல்லை.
நடிப்பை விடுத்து தீவிர அரசியலில் இறங்கும் நான் தமிழக மக்களுக்கு நேர்மையான முறையில் சேவை செய்ய விரும்புகிறேன்.
நான் அரசியலுக்கு தான் புதிது ஆனால் 37வருடங்களாக சமூக சேவையில் இருந்துள்ளேன். 10லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்களை சேகரித்துள்ளோம்.
எங்கள் நலன்புரி இயக்கத்தில் 250க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் உட்பட இளைஞர்கள் மற்றும் வேறு தொழில்களில் ஈடுபடுபவர்கள் என பலரும் அங்கம் வகிக்கின்றனர்.
வயதான வேளையிலும் நான் அரசியலுக்கு வருவது எனது வங்கி கணக்கை அதிகரிக்க அல்ல. அது என்னிடம் போதுமான அளவு உள்ளது.
என்னுடைய நோக்கம் முற்றிலும் மக்களுக்கு சேவை செய்வதே’ என குறித்த நேர்காணலின் போது கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இம் மாதம் (பெப்ரவரி) 21ஆம் திகதிஇ அப்துல்கலாமின் வீட்டில் இருந்த தமிழகம் எங்கும் மக்களை நேரில் சென்று நிலைமைகளை பார்வையிடவுள்ள கமலஹாசன்இ தனது அரசியல் பயணத்திற்காக திரையுலகில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
திரையுலகில் இருந்து விலகவுள்ளதாக கமல் அறிவிப்பு
Published byKiruththigan
-
0
Post a Comment