உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட பின்னடைவை காரணம் காட்டி ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதாக அரசாங்கம் கூற முடியாது.
சாக்குப்போக்குகளை நம்பிவிடாமல் ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றும் படி அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை உறுப்பு நாடுகள் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனித உரிமைப் பேரவையின் 26 நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 40 பிரதிநிதிகள் கலந்து கொண்ட சந்திப்பு ஜெனிவாவிலுள்ள பிரித்தானிய மிஸன் பணிமனையில் இன்றையதினம் காலை நடைபெற்றது.
இச் சந்திப்பில் எதிர்வரும் ஜெனிவா அமர்வுகளின் போது இலங்கை விடயத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பாக வியூகம் வகுக்கும் வகையில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன் போதே எம்.பி சுமந்திரன் மேற்படிக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பங்கேற்றும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

Post a Comment