புதிய படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வருவதாக வெளியான செய்திகள் குறித்து சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
என் வாழ்க்கையில் நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. தயவுசெய்து எனது திருமணத்தையும், சினிமாவையும் இணைத்துப் பேச வேண்டாம்.
திரையில் உங்களை நீண்ட நாட்கள் பார்க்க முடியவில்லையே சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டீர்களா? என்றெல்லாம் என்னிடம் கேள்வி எழுப்பப்படுகிறது. எனக்கு இசை அறிவு இருக்கிறது. எழுதவும் செய்கிறேன்.
இப்படி நடிப்பு தவிர்த்து பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நான் கதாநாயகி ஆவேன் என்று எதிர்பார்க்கவில்லை.எனவே சினிமாவில் நடிக்காமல் திருமணத்துக்கு தயாராகி விட்டேன் என்றும், வேறு வேலைகள் எதுவும் செய்ய மாட்டேன் என்றும் அர்த்தம் கொள்ளக்கூடாது.
இப்போது எனக்கு கிடைத்துள்ள நேரத்தை மனப்பூர்வமாக அனுபவிக்க விரும்புகிறேன் என சுருதிஹாசன் மேலும் தெரிவித்துள்ளார்.
சுருதிக்கு விரைவில் திருமணம்!
Published byKiruththigan
-
0
Post a Comment