ஆந்திர ஏரியில் மிதந்த தமிழர்கள் உடல் |
ஆந்திர ஏரியில் சடலங்களாக மீட்கப்பட்ட 5 பேரில் இரண்டு பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் சேலம் மாவட்டத்தை சார்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒண்டிமிட்டா என்ற பகுதி, திருப்பதி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ளது.
இங்குள்ள ஏரியில், நேற்றுபிணங்கள் மிதப்பது குறித்து போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
ஆந்திர ஏரியில் மிதந்த தமிழர்கள் உடல் |
அந்தப் பகுதியில் செம்மரங்கள் அதிகமாக உள்ளதால், அவர்கள் செம்மரம் வெட்ட வந்த தமிழகக் கூலித் தொழிலாளர்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவந்த நிலையில் இருவரின் அடையாளம் காணப்பட்டது.
ஆந்திர ஏரியில் மிதந்த தமிழர்கள் உடல் |
அவர்கள் சேலம் மாவட்டம் அடியனூரை சேர்ந்த கருப்பண்ணன் மற்றும் முருகேசன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Post a Comment