தியாக தீபம் அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவு - Yarl Voice தியாக தீபம் அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவு - Yarl Voice

தியாக தீபம் அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவு

தியாக தீபம் அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் தலைமை அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 

இந்தியப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நடைபெற்ற காலத்தில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பேரை நிறுத்தி பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி கடந்த 1988 ஆம் ஆண்டு 19.3.1988 ஆம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் அதாவது 19.04.1988 ஆம் திகதி உயிர்நீத்திருந்தார். இவரின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்திலும் புலத்திலும் தற்போது நடைபெற்று வருகின்றனது.

இதற்கமைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்திலும் நடைபெறுகின்றது. இந்த நினைவு நாளின் பத்தாவது நாளான இன்று முன்னணியின் அலுவலகத்தில் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் திருவுருபப் படத்திற்கு நினைவுச் சடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கNஐந்திரன் நினைவுச் சுடர் ஏற்றி வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இவ் அஞ்சலி நிகழ்வில் அக் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்த கொண்டு மலர் தூபி அஞ்சலி செலுத்தினர். 







 

0/Post a Comment/Comments

Previous Post Next Post