அநுராதபுரம் “மெத்சிறி செவன” சிறுநீரக நோயாளர் பராமரிப்பு நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைப்பு…..
ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய சிறுநீரக நிதியத்தின் 437 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அநுராதபுரம் பொது வைத்தியசாலையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள “மெத்சிறி செவன” சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (20) திறந்துவைக்கப்பட்டது.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதன் வளாகத்தையும் சுற்றிப் பார்வையிட்டார்.
, நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுமதிக்கப்பட்ட முதலாவது நோயாளியை ஜனாதிபதி அவர்கள் பதிவு செய்தார்.
குறைந்த வருமானம் பெறும் 2,000 குடும்பங்களுக்கு வீட்டு நீர் சுத்திகரிப்பு உபகரணங்களை வழங்கும் நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாக ஐந்து பேருக்கு வீட்டு நீர் சுத்திகரிப்பு உபகரணங்களை வழங்குதல், 200 சிறுநீரக நோயாளிகளுக்கு இரத்தத்தின் சக்கரை அளவை பரிசோதிக்கும் கருவிகளை வழங்கும் நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாகவும் வட மத்திய மாகாணத்தின் சிறுநீரக நோயாளர் உள்ளிட்ட ஏனைய நோயாளிகளின் பாவனைக்கு இரத்த அழுத்தத்தை கணக்கிடும் 200 கருவிகளை வட மத்திய மாகாண சுகாதார அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.
அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பீ.ஹரிசன், சந்திராணி பண்டார, வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வீரகுமார திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இராணுவ தளபதி உள்ளிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்
Post a Comment