அரசாங்கத்தை பிணை எடுக்கின்ற வேலையை செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் - Yarl Voice அரசாங்கத்தை பிணை எடுக்கின்ற வேலையை செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் - Yarl Voice

அரசாங்கத்தை பிணை எடுக்கின்ற வேலையை செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்


போர்க் குற்றங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து இலங்கை அரசாங்கத்தை பிணை எடுக்கின்ற வேலையையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் இப்போது அரசாங்கம் பொய் உரைப்பதாகவும் ஏமாற்றி விட்டதாகவும் கூட்டமைப்பினர் கூறுவது வேடிக்கையானது என்றும் சாடியுள்ளார்.


யாழ்.சுழிபுரத்திலுள்ள அவரது இல்லத்தில்  காலை நடாத்திய ஊடகவியியலாளர் மாநாட்டின் போதே அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இதுவரையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையே இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்ற நிலையில் மேலும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதானது ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் கடும் அதிருப்திக்குள் உள்ளாக்கியிருக்கின்றது.


புhதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகள் எதனையும் கவனத்திற் கொள்ளாமல் தங்களுடைய நாடகளின் நலன்களின் அடிப்படையிலையே இந்தத் தீர்மானமும் கால அவகாசமும் வழங்கப்பட்டிருக்கின்றது.  இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மறுக்கப்படுவது போன்றதாகவே பார்க்கப்படுகின்றன. ஆகையினால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்திருக்கின்றனர்.


இவ்வாறான நிலையில் கூட பாதிக்கப்பட்ட மக்கள் நீதியைக் கோரி நிற்கின்ற போதும் அந்த நீதியை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. ஆனாலும் தமிழ் மக்களுக்காகச் செயற்பட வேண்டிய மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டக்களிலிருந்த இலங்கை அரசாங்கத்தை விடுவித்து அவர்களைப் பாதுகாத்து வருகின்றனர்.
அது மாத்திரமல்லாமல் சர்வதேசத்தின் பிடியில் இருந்து இலங்கை அரசைப்; பிணை எடுக்கின்ற வேலைகளையே கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர். இதனை ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்கள் இருக்கின்றனர். ஆகையினால் தான் தமக்கான நீதியைக் கோரி பல வழிகளிலும் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.


இவ்வாறு தமிழ் மக்கள் நீதியைக் கேட்டு போராடி வருகின்ற போதும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு அல்லாமல் அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற வகையிலே செயற்பட்டு வருவது தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வாறான தொரு நிலைமையில் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பொய் சொல்வதாகவும் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் இப்பொது கூட்டமைப்பினர் கூறுகின்றமை வேடிக்கையானது.
ஏனெனில் இந்த நாட்டில் ஆட்சிக்கு வருகின்ற ஐக்கிய தேசியக் கட்சி அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழ் மக்கள் விடயத்தில் நீதியை நிலைநாட்டவோ அல்லது நல்லதோர் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கோ தயாரில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் எந்தத் தரப்பினராலும் அவர்களைத் தமது வலைக்குள் சிக்க வைத்து தமது தேவை முடிவடையும் வரையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றுகின்ற நிலைமையே தொடர்ந்தும் வந்திருக்கின்றது.


ஆதனைத் தான் அவர்கள் செய்வார்கள் என்று ஏற்கனவே அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தும் வெறுமனே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவைத் தெரிவித்து அவர்களை ஆட்சியில் அமர வைத்து தங்கள் சுயநலன்களை பெற்றுக் கொண்டார்களோ ஒழிய தமிழ் மக்களுக்காக இதுவரையில் எதனைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.
இதே வேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடந்த கூட்டத் தொடரின் போது கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் ஒரு கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கின்றார். ஆந்தக் கடிதத்தில் என்ன விடயம்

குறிப்பிடப்பட்டிருக்கின்றதென்பதை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கNஐந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலரும் பல தடவைகள் கோரியிருந்த போதும் அது என்னவென்று இதுவரையில் வெளிப்படுத்தப்படாத நிலையே உள்ளது.  அது ஒரு புரியாத புதிராகவே இருப்பதால் அதனை வெளிப்படுத்த வேண்டுமென்று கோருகின்றொம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post