வடக்கு மாகாண தொழில்நுட்பவியல் சேவை உத்தியோகத்தர்களால் இன்று சுகவீன விடுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணியும் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஒன்றுதிரண்ட தொழில்நுட்பவியல் சேவை உத்தியோகத்தர்கள், தமது சேவைக்கான தனியான சேவைப் பிரமாணக் குறிப்பை அரசு நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தி பேரணியாகச் சென்றனர். அவர்களது பேரணி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் வரை சென்றது.
பல நூற்றுக் கணக்கானவர்கள் பங்கேற்ற இந்தப் பேரணியில் “நிர்வாகிகளே களக் கொடுப்பனவு மற்றும் பணிக் கொடுப்பனவை தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர்களுக்கு வழங்கவும், 6/2016 சுற்றறிக்கைக்கு அமைவாக தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர்களுக்கான படிகளை வழங்கவும், அதிகாரிகளே தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர்களின் பணியை உறுதிப்படுத்தவும், அபிவிருத்திகள் தடைப்படும்? தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர்களின் போராட்டம் ஆரம்பம்” உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
Post a Comment