தாயகம் அறக்கொடை நிதியத்தின் அங்குரார்ப்பணம் - Yarl Voice தாயகம் அறக்கொடை நிதியத்தின் அங்குரார்ப்பணம் - Yarl Voice

தாயகம் அறக்கொடை நிதியத்தின் அங்குரார்ப்பணம்

தாயகம் அறக்கொடை நிதியத்தின் அங்குரார்ப்பண வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் லக்சுமி நாராயண மண்டபத்தில் நடைபெற்றது. 


இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நிதியத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இதன் போது வறுமைக் கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளையும் பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக கோ தாண அதாவது பசுமாடுகளையும் வழங்கி வைத்தார்.


நல்லூர் ஆதீனக் குருமுதல்வரின் ஆசியுடன் ஆரம்பமாகிய இந் நிதிய அங்குரார்ப்பண நிகழ்வில் நிதியத்தின் தலைவரான வீ. சிறிதரன் தம்பதிகள், யாழ் வர்த்தக சங்கத் தலைவர் உள்ளிட்ட வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post