மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்குக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(24) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குப்பிழான், ஏழாலை, கட்டுவன், சூராவத்தை, மயிலங்காடு, ஊரெழு,சுன்னாகம் சிவன் கோயிலடிப் பிரதேசம், சுன்னாகம் இலங்கை தொலைத் தொடர்பு நிலையம், ரொட்டியாலடி, அம்பலவாணர் வீதி, பெரியமதவடி, இலங்கை வங்கி முன் ஒழுங்கை, மாசியப்பட்டி, பெருமாள் கடவை, கந்தரோடை , மருதனார்மடம், மருதனார்மடம் யாழ்.நுண்கலைப்பீடம், சண்டிலிப்பாய் ஆலங்குளாய், உடுவில் ஆர்க் வீதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சுழற்சி முறையிலான மின்தடை வழமை போன்று அமுலிலிருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment