வரலாற்றுச் சிறப்பு மிக்க உலகப் பெருமஞ்சம் ஓடுகின்ற இணுவில் கந்தசுவாமி ஆலய சுற்று வீதிகள் சுமார் நான்கு 4 கோடி ரூபா செலவில் காப்பற் வீதியாக அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் விசேட நிதி ஒதுக்கீட்டில் மூலம் சுமார் நான்கு கோடி ரூபா செலவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க உலகப் பெருமஞ்சம் வீதியுலா வருகின்ற இணுவில் கந்தசுவாமி கோவில் வீதி மற்றும் அதனோடு இணைந்த கிராம வீதிகள் என்பனவே காப்பற் வீதியாக அமைக்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் ஒதுக்கப்பட்ட நான்கு கோடி ரூபாவுக்கான அனுமதி யாழ்மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்பட்டு குறித்த வீதிக்கான கேள்வி கோரல் மூலம் மாவட்ட செயலகத்தால் வீதி வேலைகளை செயவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை வலிதெற்கு பிரதேச சபைத் தவிசாளர் க.தர்ஷன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர் வதனி, யாழ்மாவட்ட செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி ஒப்பந்தகாரர் ஆகியோரோடு இணுவில் கந்தசுவாமி ஆலய பகுதிக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் வீதி அளவீட்டுப் பணிகள் தொடர்பாக ஆராய்ந்ததோடு ஆலய நிர்வாகத்தினருடனும் கலந்துரையாடினார். உலகப் பெருமஞ்ச வீதி புனரமைக்கப்படுகின்ற போது அதனோடு அண்டிய கிராம வீதிகள் அனைத்தும் காப்பற் வீதியாக அமைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். உலக இந்துக்களே திரும்பிப் பார்க்கின்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க உலகப் பெருமஞ்சம் வீதியுலா வருகின்ற வீதியினை நவீன காப்பற்வீதியாக அமைப்பதற்கு நிதியொதுக்கிய பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு ஆலய நிர்வாகத்தினரும் அப்பகுதி மக்களும் நன்றியினைத் தெரிவித்தனர்.
Post a Comment