யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் - Yarl Voice யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் - Yarl Voice

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் தங்களது கொரிக்கையில்,
கைவிரல்/ கண்ரேகை பதிவு இயந்திரத்தின் மூலம் வருகை மற்றும் மீள் செல்கையினை பதிவு செய்தல் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் உள்வாங்கப்பட்ட பொது நிர்வாக சுற்று நிருபங்களை பாரபட்சமாக நடைமுறைப்படுத்துவதையும்இ ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுக்கு நியாயமற்ற நிபந்தனைகள் விதிப்பதையும்இ ஊழியர்களின் வரவுப் பதிவேட்டை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நீக்குவதையும ஊழியர்களை பல்வேறு வகையில் இது தொடர்பாக மிரட்டுவதையும் குறித்த ஒரு பகுதியில் இவ்விடயம் தொடர்பாக நிரந்தர ஊழியர்களின் பணிகளினை மேற்கொள்ள தனியே பயிலுநர்களை நியமித்ததுடன் குறித்த பகுதித் துறைத்தலைவர் ஊழியர்களுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்ளுகின்ரார்.

மேலும் முறைப்படியான விசாரணைகளின்றி – குற்றஞ்சாட்டப்பட்ட ஊழியரிடம் முறையாக விசாரணை செய்யாமல் ஒழுக்காற்று விசாரணையின்றி முறையற்ற முதற்கட்ட விசாரணையை மட்டும் மேற்கொண்டு ஊழியர்களின் சேமலாபநிதி, பணிக்கொடை என்பவற்றைத் தடுத்துவைத்தல்ஃகுறைத்தல், பணிஉயர்வுகளைத் தடுத்தல்,தாமதப்படுத்தல், மேலதிக வேலைநேரக் கொடுப்பனவு, விடுப்பு போன்றவற்றைத் தடுத்தல் மற்றும் தண்டம் அறவிடல் எனப்பலவாறாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றுநிருபங்கள் மற்றும் தாபனவிதிக் கோவை விதிமுறைகளை மீறி நடைமுறைப்படுத்ப்படுகிரது.

சம்பளக் கணிப்பீட்டில் இடம்பெற்ற தவறுகள் பல எமது கடுமையான முயற்சியின் பலனாக திருத்தப்பட்ட போதிலும், மீண்டும சுற்றுநிருபங்களை மீறி; முன்னரையொத்த கணிப்பீட்டு தவறுகள் மேற்கொள்ளப்படுதல் 
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஊழியர் காப்புறுதித்திட்டமானது, பல்கலைக்கழக சுய நிதியீட்டத்தின் முழுமையான அல்லது மிகக் கணிசமான பங்களிப்புடன் இலங்கை முழுவதிலுமுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட எமது பல்கலைக்கழகம் மட்டும் இதுகுறித்து எம்முடிவினையும் எடுக்காமை போன்ற விடயன்க்லி நடவடிக்கை எடுக்கமையை கண்டித்து இன்று  காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை கடமையிலிருந்து விலகி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post