அரசிற்கான ஆதரவை ஏன் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் வழங்க வேண்டும் - Yarl Voice அரசிற்கான ஆதரவை ஏன் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் வழங்க வேண்டும் - Yarl Voice

அரசிற்கான ஆதரவை ஏன் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் வழங்க வேண்டும்

அரசாங்கம் ஏமாற்றுகிறது அல்லது பொய் கூறுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவார்களாயின்; அந்த அரசிற்கான ஆதரவை ஏன் தொடர்ந்தும் வழங்க வேண்டுமெனக் கேள்வி எழுப்பியிருக்கும் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவருமான அனந்தி சசிதரன் அரசிற்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள கூட்டமைப்பினர் தயாரா என்றும் கேட்டுள்ளார்.


கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் தெரிவித்ததாவது..

காணாமற்போனோர் மட்டுமல்ல பொறுப்புக்கள் உட்பட அனைத்திலும் தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் இலங்கை அரசு ஏமாற்றி வருகிறது. இவ்வாறு அரசாங்கம் ஏமாற்றி வருவதனையே நாங்கள் தொடர்ச்சியாகவே சொல்லி வருகின்ற போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கிக் கொண்டு தான் வருகின்றது.


இவ்வாறு அரசிற்கு சகல விதத்திலும் ஆதரவை வழங்கி வருவது மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கு எதுவும் இல்லாத இந்த வரவு செலவுத் திட்டத்திற்கும் ஆதரவை வழங்கியிருக்கிறது. அதே போன்று மூன்றாவது தடவையாகவும் வரவு செலவுத் திட்டத்திற்கு அரசாங்கத்துக்கு வழங்க போகின்றது
ஏனேனில் நிபந்தனையற்ற ஆதரவையே இந்த அரசிற்கு கூட்டமைப்பு வழங்கி வருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே அரசிற்காக சகல சந்தர்ப்பங்களிலும் தங்களாலான ஆதரவை வழங்கி வருகின்றார்கள். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் ஏமாற்றுக் கொண்டு தான் இருக்கின்றது.


இவ்வாறான நிலையில் இப்போது தேர்தல்கள் வரவிருக்கின்றதால் இந்த அரசாங்கம் ஏமாற்றி வருவதாக கூட்டமைப்பினர் கூறி வருகின்றனர். இனி தேர்தல் காலம் என்பதால் தமிழ் மக்களையும் மாற்றுவதற்காக இப்போது முயற்சிக்கின்றனர்.
ஆகையினால் அரசாங்கம் பொய் கூறுகின்றதோ அல்லது ஏமாற்றுகின்றதோ என்று உண்மையில் கூட்டமைப்பின் கூறுவார்களாயின் இந்த அரசிற்கு வழங்கி வருகின்ற ஆதரவை விலக்கிக் கொள்வார்களா என்பதுடன் அவ்வாறு விலக்கிக் கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றனரா என்று கேட்கின்றோம்.


இங்கு தந்தை செல்வா காலம் முதல் நாம் ஏமாற்றப்பட்டே வருகிறோம். ஆந்தக் காலங்களில் தெரியாமல் அப்போது ஏமாற்றபட்டாலும் இப்போது அரசினால் மட்டுமல்ல எம்மவர்களாலும் தெரிந்து கொண்டே ஏமாற்றபடுகிறோம்.

இவ்வாறானதொரு நிலையிலே ஒரு பக்கம் ஆதரவை அரசிற்கு வழங்கிக்கொண்டு மறுபக்கம் அரசாங்கம் ஏமாற்றுகிறது என்று கூறி கூட்டமைப்பு மக்களை ஏமாற்ற முனைகிறது. அதிலும் தேர்தல் காலம் நெருங்கும் நிலையில் இப்போது அரசு ஏமாற்றுகிறது என்று கூறுகின்றவர்கள் ஏன் தொடர்ந்தும் அரசிற்கு ஆதரவை வழங்க வேண்டும்.

இவ்வாறு அரசு இப்போது தம்மை மாற்றுவதாக கூற வேண்டியதன் நோக்கம் தான் என்ற என்ற கேள்வி எழுகிறது. ஆகவே தேர்தல்கள் வரவுள்ளதால் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்று கூட்டமைப்பினர் கனவு கானுவார்களாக இருந்தால் அது கனவாகவே போகுமே தவிர ஒருபோதும் நனவாக முடியாது.
ஏனெனில்  கூட்டமைப்பின் ஏமாற்று வித்தைச் செயற்பாட்டை மக்கள் இணங்கண்டுள்ளனர் எல்லா காலமுமும் மக்களை ஏமாற்றலாம் என்ற நினைக்க கூடாது. ஆகையினால் மக்களை ஏமாற்றுகின்ற் இவர்களின் நடவடிக்கை தொடர்வதால் தற்போது அவர்களது முகத்திரையே கிழுந்துள்ளது.


இவர்களது ஏமாற்று நாடகத்தை தற்போது பெரும்பான்மையான தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர் . ஆகையினால் அடுத்து வரும் தேர்தல்களில் கூட்டமைப்பினர் மக்களிடம் நல்ல பாடம் படிப்பார்கள் என்று அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post