யாழ்.நகரத்தின் திண்மக் கழிவகற்றலை விரிவுவடுத்தி தூய்மையானநகரமாக்கும் செயற்றிட்டம் - Yarl Voice யாழ்.நகரத்தின் திண்மக் கழிவகற்றலை விரிவுவடுத்தி தூய்மையானநகரமாக்கும் செயற்றிட்டம் - Yarl Voice

யாழ்.நகரத்தின் திண்மக் கழிவகற்றலை விரிவுவடுத்தி தூய்மையானநகரமாக்கும் செயற்றிட்டம்

எஸ்.நிதர்ஷன்-


யாழ்.நகரத்தின் திண்மக் கழிவகற்றலைவிரிவுவடுத்தி தூய்மையானநகரமாக்கும் செயற்றிட்டம் மிகவிரையில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகத் தெரிவித்திருக்கும் யாழ்.மாநகரமுதல்வர் இமானுவேல் ஆனால்ட் இச் செயற்றிட்டத்திற்காக ஜப்பான் நாட்டுஅரசின் ஊடாக 83 ஆயிரம் டொலர் பெறுமதியான 4 ரக் வண்டிகள் வழங்கப்படவுள்ளதாகவும்குறிப்பிட்டார்.


யாழ்.மாநகரசபையில் நேற்றுவியாழக்கிழமைநடைபெற்றஊடகவியலாளர் சந்திப்பிலேயேஅவர்மேற்கண்டவாறுவெளியிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-


இலங்கைக்காக ஜப்பான் தூதரகம் யாழ்.மாநகரபகுதியில் நடைபெறும் திண்மக் கழிவகற்றல் தொடர்பில் கூடுதலானஅக்கறைகொண்டுள்ளது. சபைக்கானமக்கள் பிரதிநிதிகள் தெரிவிற்குமுன்னரில் இருந்தேஅத்தூதரகம் திண்மக் கழிவகற்றல் தொடர்பில் பல்வேறுநடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளார்கள்.


இந்நிலையில் சபையில் ஆட்சிஅமைக்கப்பட்டபின்னர் அந்நாட்டு தூதரகத்தோடுதொடர்பினைஏற்படுத்தியபோதுஅந்நாட்டில் இருந்து 4 ரக் வண்டிகளைஅன்பழிப்பாகவழங்குவதற்குநடவடிக்கைஎடுத்துள்ளனர்.
இதன்படி இலங்கைக்கான தூதரகத்திற்குசென்றுரக் வண்டிகளைபெற்றுக் கொள்வதுமற்றும் திண்மக் கழிவகற்றலுக்கானஒத்துழைப்புதொடர்பானஉத்தியோகபூர்வமானஒப்பந்தத்தைகைச்சாத்திட்டிருந்தோம்.  இவ்வொப்பந்தத்தின் ஊடாக 83 ஆயிரத்து 452 டொலர் தொகையிலானமீள் திருத்தம் செய்யப்பட்ட 4 ரக் வண்டிகளைவழங்கநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.


இவ்வுதவியூடாகஎதிர்காலத்தில் யாழ்.நகரத்தை தூய்மையாக்கும் திண்மக் கழிவகற்றும் செயற்றிட்டம் விரைவில் புதியஉத்வேகத்துடன் நடாத்தப்படும். தொடர்ச்சியாக சபை உறுப்பினர்களின் ஆளுமைவிருத்திமற்றும் வெளியுலகதொடர்பாடல் முறைக்கும் சிலதிட்டங்களைஎதிர்காலத்தில் செய்வதற்கு ஜப்பான் தூதரகம் முன்வந்துள்ளதுஎன்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post