தமிழ் அரசியல் தலைவர்களைவிட, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை என முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தமிழ் மக்கள் தொடர்பில் எவ்வித அக்கறையும் கிடையாது. இவர்கள் சுயநல சிந்தனை கொண்டவர்கள்.
இதனைத் தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தலைவர்களைவிட தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தனர்.
இந்த அரசு மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்குப் பிரதான காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பேயாகும். மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் இவர்களுக்கு 20 சதவீத வாக்குகள் கூட கிடைக்காது” – என்றார்.
Post a Comment