இரண்டு வருட என்பது இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கவே .. சுரேஸ் - Yarl Voice இரண்டு வருட என்பது இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கவே .. சுரேஸ் - Yarl Voice

இரண்டு வருட என்பது இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கவே .. சுரேஸ்

-எஸ்.நிதர்ஷன்-


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள 40.1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய விடயங்களை ஏற்க மாட்டோமென இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையிலும் இரண்டு வருட என்பது இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பதாகவே அமைகிறதே ஒழிய பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான விமோசனங்களையோ அல்லது நீதி, நியாயங்களையோ கொடுக்காது என ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 அவரது வீட்டில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது Nஐனிவா விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது...


ஐ.நா மனித உரிமைப் பேரவையினுடைய கூட்டத்தொடர் ஆரம்பமாகி முடிவடைய இருக்கிறது.இலங்கை தொடர்பான இறுதிக்கட்ட விவாதம் நடைபெற்று 40.1 என்ற தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இலங்கை தொடர்பில் ஏற்கனவே  30.1 மற்றும் 34.1 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதனை நடைமுறைப்படுத்த நான்கு வருட காலம் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் அந்த நான்கு வருடங்களிலும் அத் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் அதே தீர்மானத்திற்கு இன்னும் இரண்டு வருட காலம் அவகாசம் கொடுத்து நிறைவேற்றப்பட இருக்கிறது. ஆயினும் இத் தீர்மானத்திற்கு இலங்கை அரசு ஆதரவைக் கொடுப்பதாகவும் கூறப்பட்டாலும் அதில் குறிப்பிட்டி முக்கிய விடயங்களை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் மனித உரிமைகள் பேரவையிலையே இலங்கை அரசு சொல்லியிருக்கின்றது.



இவ்வாறானதொரு நிலைமையிலையே இலங்கை அரசாங்கம் தொடர்பாக உயர்ஸ்தானிகர் வெளியிட்ட கருத்துக்களைப் பார்க்க வேண்டும். அதாவது இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதை நடைமுறைப்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பொறுப்புக் கூறல் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை ஆகியவற்றில் இலங்கை அரசு மெத்தனமாக நடக்கிறது என்றும் வேறு அவகாசங்கள் என்ன என்பதையும் ஆராய வேண்டுமென்ற விடயத்தையும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆகவே இலங்கை அரசாங்கம் பொறுப்புசறல் விடயத்தில் சரியாக நடக்கவில்லை என்பதையும் வேறு வழிவகைகளைக் கண்டறிய வேண்டுமென்றும் அவர் சொல்லியுள்ளார். ஆகவே இதனைப் பார்க்கின்ற போது இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறலில் நம்பத் தகுந்தமாதிரி நடக்காது என்பதை வெளியிப்படுத்தியிருக்கிறது. பல்வேறுபட்ட நாடுகளும் கூட இலங்கை அரசாங்கம் இதனை நிறைவேற்ற கால அட்டவணை தேவை என்பதையும் அதனை ஏற்றுக் கொள்ள அரசு தயாராக இல்லை என்றும் சொல்லயுள்ளனர்.


ஏனெனில் சுர்வதேச நீதிபதிகளை நாங்கள் உள்ளடக்க முடியாது என்றும் அதற்கு சட்ட திருத்த தேவை என்றும் எம்மால் அந்த திருதத்தத்தை அமைக்க முடியாது என்றும் இங்கு அலுவலகம் நியமிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகையும் என முக்கியமான பலதையும் இலங்கை அரசாங்கம் ஏற்க மறுத்துவிட்டது. இறுதியாக கால வரையறை என்றதையும் இலங்கை ஏற்க மறுத்துவிட்டது.


ஆக 30.1 மற்றும் 34.1 என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் நீங்கள் குறிப்பிடும் சில விடயங்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மாட்டாது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திலேயே இலங்கை அரசாங்கம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில் இன்று நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானம் குறைந்தபட்சம் காலவரையரைறை உள்ளடக்கியதாகவும் இல்லை. கலப்பு நீதி பொறிமுறையை உருவாக்க கூடியதாக இருபக்குமா என்பதும் சந்தேகம். இருந்தாலும் இந்த விடயங்களை தாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோமென இலங்கை அரசாங்கம் மறுத்துவிட்டது.
அவ்வாறு இருந்தாலும் ஏன் இந்த தீர்மானம் என்று பார்க்கின்ற போது குறைந்தபட்ச ஒரு அழுத்தம் என்று பார்த்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கிட்டுமா, நீதி கிடைக்குமா, குற்றங்கள் சம்மந்தமாக விசாரணை நடக்குமா, இப்படியான சம்பவங்கள் மீள நடக்காமல் மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்று பார்த்தால் அவை அனைத்தும் கேள்விகுறியாகத் தான் இருக்கிறது.


ஆனாலும் இந்த விடயங்களை உள்ளடக்கியதாக கொண்டு வரப்பட்ட முன்னைய தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியது. அதே நேரம் இந்த முறையும் கொண்டு வரப்படவுள்ள அத்தகையதொரு தீர்மானத்திற்கு இப்ப அனுமதி வழங்கினாலும் அதில் குறிப்பிடப்பட்டவற்றை இலங்கை அரச தரப்பினர்கள் நிராகரிக்கின்றனர்.


இந்த நிலைமைகளைப் பார்க்கின்ற போது மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்கனவே 4 வருட காலம் வழங்கப்பட்டு அத் தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமலே தற்பொது அந்தக் காலம் முடிவடைந்த விட்டது. இவ்வாறானதொரு நிலையிலையே மீளவும் இலங்கைக்கு இரண்டு வருட காலம் வழங்கப்பட இருக்கின்றது.
ஆகவே மனித உரிமைகள் பேரவையின் இத் தீர்மானத்தைப் பார்க்கின்ற போது இலங்கை அரசைப் பாதுகாப்பதும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகவுமே அமைகிறதே தவிர பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான விமோசனங்களையோ நீதியையோ இது கொடுக்காது என்பது தெளிவாகின்றது.

இன்னும் சில காலத்திற்குள் இலங்கையில் தேர்தல்கள் வரவிருக்கின்றது. அதில் இப்போது இருக்கின்றவர்களும் வரலாம் புதியவர்களும் வரலாம். ஆனால் அவ்வாறு யார் வந்தாலும் எதனையும் செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் ஈழத் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்விலும் நீதி நியாயங்களைப் பொறுத்தவரையில் இவர்களுக்குள் வேற்றுமை இல்லை. ஆகவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்த் தரப்புக்கள் ஆராய வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post