-எஸ்.நிதர்ஷன்-
யுhழ் மாநகர சபையில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே ஆர்னோல்ட் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..
எனக்கு முகவரியிடப்பட்ட தபால் ஒன்று கடந்த 14 ஆம் திகதியன்று கிடைக்கப் பெற்றது. அதற்குள்ளே இருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது என்னவெனில் மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும், பேச்சாளர் சயந்தன், ஆர்னோல்ட் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இந்த மடல் வந்து மறு நாள் 15 ஆம் திகதி என்னுடைய துணைவியாருடைய தொலை பேசிக்கு வைபர் மூலமாக புதைகுழி படத்தை போட்டு ஆரம்பம் என்ற விடயத்தை குறிப்பிட்டு தெலைபேசி அழைப்பு போயிருக்கின்றது. இரண்டு அழைப்புக்கள் வந்த நிலையில் மீள அழைப்பு எடுக்கப்பட்ட போது அதற்கு பதில் கிடைக்கவில்லை.
இதனையடுத்து அன்றையதினம் உடனடியாக சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகருடன் நான் கலந்துரையாடியிருந்தேன்.
அவர் உடனடியாக யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததற்கமைய இரண்டு பொலிஸார்கள் வந்து என்னிடம் சகல விடயங்களையும் கேட்டு அறிந்து சென்றார்கள்.
கம்பன் கழக நிகழ்வில் ஒரு நாள் நிகழ்வின் தொடக்க உரை என்னுடையதாக இருந்தது. ஆந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாமென்று விசேடமாககக் குறிப்பிடப்பட்டு அச்சுறுத்தல் வந்திருந்தது. அதனுடைய அர்த்தம் என்னவென்று எனக்கு புரியவில்லை.
ஆந்த நாளில் கம்பன் விழாவில் நான் கலந்து கொள்வதற்காக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததையும் இந்த இடத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனாலும் இதுவரையில் இவ்வளவு காலத்துக்கு யாரும் எதிரிகள் என்று எனக்கு இல்லை. நான் எல்லோரோடும் சமமாகப் பழகின்ற ஒரு நபர். ஆகையினால் எதிரி என்று யாரும் இல்லை. ஆனால் அண்மைக்காலமாக மாநகரத்திற்குள் இடம்பெறும் அத்துமீறல்கள் தொடர்பாக சில நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் காரணமாக இவ்வாறான அச்சுறுத்தல்கள் இருந்தன. ஆனால் எழுத்து மூலமாக இவ்வாறு வந்ததன் பிரகாரமும் அதிலே ஒரு குறிப்பிட்ட நபரின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாலும் அதுகளோடு ஒத்திசைந்து பார்க்கின்ற போது ஒருவேளை மாநகரத்திற்குள் நடைபெற்ற அத்துமீறல்களை கூடுதலான அக்கறையெடுத்து செயற்பட்டதன் காரணத்தால் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்திருக்குமோ என்ற எண்ணத் தோன்றுகின்றது.
ஏனென்றால் அதற்கு முன்னதாக அவ்வாறான எந்தவnhரு அச்சுறுத்தல்களும் கிடைக்கப்பெற்றதும் இல்லை. அது தொலைபேசி வாயிலாகவும் சரி எழுத்து மூலமாகவும் சரி அல்லது வேறு நபர் மூலமாகவும் சரி கிடைக்கப்பெற்றது கிடையாது.
ஆகவே அன்றைய நிகழ்வைக் குறிப்பிட்டு அதில் என்னைக் கலந்து கொள்ள வேண்டாமென குறிப்பிடப்பட்டிருந்தாலும் அந்த நிகழ்வில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்பதால் பொலிஸ் பாதுகாப்பைக் கோரி பொலிஸ் பாதுகாப்புடன் கலந்து கொண்டிருந்தேன்.
இந் நிலையில் அந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியிருக்கின்றார்கள். ஆகவே இத்தகைய அச்சுறுத்தல்களால் காரியாலயத்திற்கும் போக்குவரத்துக்குமான பொலிஸ்; பாதுகாப்பை கோரவும் எண்ணியுள்ளேன் என்றார்.
Post a Comment