எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் A.யூட்ஸன் உத்தரவு.
இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க வந்திருந்த முருகேசன்,முனியாண்டி, ரெனிசன்,சுப்பைய்யா உள்ளிட்ட நான்கு மீனவர்களை நெடூந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மருத்துவ சோதனைக்கு பின் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
குறித்த மீனவர்களை ஊர்க்காவற்த்துறை நீதிமன்ற நீதிபதி யூட்சன் வீட்டில் ஆஜர்படுத்தினர் வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை எதிர்வரும் மாதம் 16ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்திரவிட்டார்.
Post a Comment