ஊடகவியலாளர்களுக்கான விருது விழா - Yarl Voice ஊடகவியலாளர்களுக்கான விருது விழா - Yarl Voice

ஊடகவியலாளர்களுக்கான விருது விழா

IMS சர்வதேச ஊடக அமைப்பும் யாழ்.ஊடக அமையமும் இணைந்து நடாத்திய தகவலறியும் உருமைச் சட்டம் தொடர்பான போட்டியில் வெற்றியீட்டிய ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது.

இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமான இந்த விருது வழங்கும் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

IMS சர்வதேச ஊடக அமைப்பும் யாழ்.ஊடக அமையமும் இணைந்து தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் வடமாகாணத்தில் 5 மாவட்டங்களையும் சேர்ந்த 30 ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியை நடாத்தியது.

இந்த பயிற்சியின் அடுத்த கட்டமாகா பயிற்சியில் கலந்து கொண்ட 30 ஊடகவியலாளர்களுக்கிடையில் தகவலறியும் உரிமைச் சட்டத்தை பிரயோகித்து செய்திகள், ஆக்கங்களை எழுதும் போட்டி ஒன்றிணையும்  நாடத்தியிருந்தது.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற ஊடகவியலாளர்களுக்கே இன்று விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கு.செல்வகுமார், அ.யசீகரன், எஸ்.குமணன் ஆகிய 3 ஊடகவியலாளர்கள் விருதுகளை பெற்றனர்.

இந்நிகழ்வில் வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கலந்து கொண்டிருந்தார்.


















0/Post a Comment/Comments

Previous Post Next Post