வேலை வாய்ப்பு கோரி பட்டதாரிகள் யாழில் போராட்டம் - Yarl Voice வேலை வாய்ப்பு கோரி பட்டதாரிகள் யாழில் போராட்டம் - Yarl Voice

வேலை வாய்ப்பு கோரி பட்டதாரிகள் யாழில் போராட்டம்



வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வட மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளானர்.

மாகாண ஆளுநரின் பொது மக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்ற நிலையிலேயே வேலையில்லலா பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த அலுவலகம் முன்பாக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் தமக்கான நியமனத்தை கால தாமதமுன்றி விரைந்து வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பட்டதாரிகளில் உள்வாரி வெளிவாரி எனப் பாகுபாடு காட்ட வேண்டாம்இ அனைவருக்கும் நியமனம் வேண்டும். கால தாமதம் வேண்டாம்இ படித்தவர்களுக்கு வேலை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.







0/Post a Comment/Comments

Previous Post Next Post