இலங்கை- பாகிஸ்தான் முதலாவது போட்டி மழையால் ரத்து
பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதன்படி இன்றைய தினம் கராச்சி மைதானத்தில் நடைபெறவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக நாணய சுழற்சியும் மேற்கொள்ளப்படாது கைவிடப்பட்டது.
இந்நிலையில்இ இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் 29ஆம் திகதி அதே மைதானத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் அங்கு தொடரும் மழையுடனான வானிலை காரணமாக போட்டி 30 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி 30 ஆம் திகதி மாலை அதே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment