சஜித்திற்கு வடக்கிலிருந்து முதலாவது ஆதரவைத் தெரிவிக்கும் தமிழ்க்கட்சி
ஐக்கிய தேசியக் கட்சியின் ஐனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவை மக்கள் முன்னேற்றக் கூட்டணி ஆதரிக்க உள்ளதாக அக் கட்சியின் செயலாளர் நாயகம் கணேஸ் வேலாயுதம் அறிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள கணேஸ் வேலாயுதம் சஜித் பிரேமதாசா ஊடாக தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கலாம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சிகள் அறிவித்து வருகின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரா சஜித் அறிவிக்கப்பட்டிருக்கின்றார். அவருக்காக வடக்கிலிருந்து முதலாவதாக தனது கட்சியின் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ரெலோ அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளராக இரந்த கணேஸ் வேலாயுதம் அக்கட்சியிலிருந்து வெளியேறி மக்கள் முன்னேற்றக் கூட்டணி எனும் கட்சியை ஆரம்பித்திருந்தார். இப்பொது தன்னுடைய கட்சி சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கப்போவதாக அறிவித்தள்ளார்.
இது தொடர்பில் விரைவில் சஜித் பிரேமதாசாவுடன் பேசவுள்ளதாகவும் இதன் போது தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் முதல் அன்றாடப் பிரச்சனைகள் அனைத்தையுமு; பேசி அவற்றைத் தீர்த்து வைக்கின்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இளமையான வேட்பாளராக இருக்கின்றார். அவருக்கு ஆதரவும் அதிகமாக உள்ளது. ஆகவே இவருடன் இணைந்து செயற்பட்டால் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வைக் காணலாம்.
கடந்த காலங்களில் தமிழ்த் தலைவர்கள் பேரம் பேசுதல் என்று சொல்லிக் கொண்டு மக்களுக்கான பெரம் பேசுதல்களைச் செய்யாமல் தமது பொக்கற்றுக்களை நிரப்புமு பேரம் பேசல்களையே செய்த வந்ததாகவும் தாம் அவ்வாறான பேரம் பேசல்களில் ஈடுபடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்
Post a Comment