ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒத்திவைப்பு - Yarl Voice ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒத்திவைப்பு - Yarl Voice

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒத்திவைப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடைப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுதாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்காக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

வணக்கத்திற்குரிய தம்­பர அமில தேரர் மற்றும் பேரா­சி­ரியர் சந்­தி­ர­குப்த தேனுவார ஆகி­யோரால் இந்த மனு தாக்கல் செய்­யப்­பட்­டது.

குறித்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் புவனேக அலுவிஹரேஇ முர்டு பெர்னாண்டோஇ எஸ். துரைராஜா ஆகியோர் முன் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மனு மீதான விசாரணை ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது

0/Post a Comment/Comments

Previous Post Next Post