என்ன செய்யப் போகின்றனர் சிந்திப்பார்களா தமிழர் தலைமைகள்? - Yarl Voice என்ன செய்யப் போகின்றனர் சிந்திப்பார்களா தமிழர் தலைமைகள்? - Yarl Voice

என்ன செய்யப் போகின்றனர் சிந்திப்பார்களா தமிழர் தலைமைகள்?


ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தரப்புக்கள் ஒருமித்து முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகின்ற அதே நேரத்தில் தமிழர் தரப்பில் ஒருவரை ஐனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.அதே நேரம் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.  இதனால் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய இக்கட்டான கட்டத்திற்கு தமிழர் தரப்புக்கள் தள்ளப்பட்டிருக்கின்றன.

இலங்கையின் நவம்பர் 16 ஆம் திகதி ஐனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலுக்கான ஐனாதிபதி வேட்பாளர்கள் குறித்து பெரும்பான்மைக் கட்சிகளிடையே போட்டிகளும் குழப்பங்களும் ஏற்பட்டிருந்த நிலையிலும் தற்பொது அவர்கள் தமது கட்சிகளின் முடிவுகளை அறிவித்து விட்டனர்.

ஆயினும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது வேட்பாளர்கள் குறித்தோ அல்லது யாருக்கும் ஆதரவை வழங்குவது குறித்தோ எந்தவிதமான முடிவுகளையும் இதுவரையில் எடுக்கவில்லை. அந்தக் கட்சி முடிவெடுப்பதில் தொடர்ந்தும் குழப்பம் நிலவி வருகின்றது.

இதே போன்ற குழப்பம் ஐக்கிய தேசியக் கட்சியிலும் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருமித்த முடிவொன்றை எடுத்து சயித் பிரேமதாசாவை அறிவித்துள்ளனர். அதே போல மகிந்த ராஐபக்சவின் பொது ஐன பெரமுனவும் கோத்தபாய ராஐபக்சவை அறிவித்துள்ளது.

இதற்கு மேலாக மக்கள் விடுதலை முன்னணியான Nஐவிபி தனது ஐனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை அறிவித்துள்ளது. இவ்வாறு தெற்கு பெரும்பான்மைக் கட்சிகள் தமது நிலைப்பாடுகளை அல்லது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

இன்னும் சில தினங்களில் சுதந்திரக் கட்சியின் முடிவும் அறிவிக்கப்படுமென அக் கட்சி தெரிவித்திருக்கின்றது. ஆக மொத்தத்தில் தெற்கில் இருந்த குழப்பங்கள் போட்டிகள் முடிவிற்கு கொண்டு வரப்படுகின்றன. இதன் பின்னராக தமிழ்த் தரப்புக்களின் நிலைப்பாடுகள் குறித்தே பல்வெறு கேள்விகளும் எழுப்பபடுகின்றன.

அதாவது இந்த ஐனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் எத்தகைய முடிவுகளை எடுக்கப்  போகின்றனர் என்பதே இன்றைக்கு பலர் முன்னாலும் எழுப்பப்டும் கேள்வியாக இருக்கின்றது. ஏனெனில் ஐனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்புக்களின் ஆதரவு என்பது இன்றியமையாதாது. அதாவது தமிழ் மக்களின் வாக்குகளே வெற்றி பெறும் வேட்பாளர்களையே தெரிவு செய்யக் கூடியதாக இருக்குமென்ற கருத்து இருக்கின்றது.

ஆனால் கடந்த தேர்தலிலும் கூட பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசென அறிவிக்கப்பட அவருக்கு கூட்டமைப்புதனது ஆதரவை வழங்கியது. ஆதன் போது மைத்திபால சிறிசேன இனவாதியல்லஇ எளிமையானவர்இ தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பார் என்றெல்லாம் தமிழ் மக்களுக்கு கூறியெ வாக்குகளும் பெறப்பட்டது. ஆனால் அதன் பின்னர் நடந்தவை என்னவென்று அனைவருக்கும் தெரியும்.

இதே நேரத்தில் இன்றைக்கு வடக்கு கிழக்கில் நடைபெறும் விடயங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டிய தேவையும் இருக்கின்றது. குறிப்பாக காணாமற்பொனோர் விவகாரம். ஆரசியல் கைதிகள் விடுதலைஇ காணிகள் ஆக்கிரமிப்புஇ காணி விடுவிப்புஇ தமிழர் தயாகப் பிரதேசங்களை சிங்கள மயமாக்கல்இ பொளத்த பிக்குகளின் அடாவடித்தனங்கள் என பிரச்சனைகள் இருக்கின்றதுடன் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ற விடயம் மிக முக்கியமாக இருக்கின்றது.

ஆனால் ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற சயித் பிரேமதாசாஇ அனுரகுமார திசாநாயக்கஇ கோத்தபாய ராஐபக்ச என இந்த மூவருமே பௌத்த சிங்கள மேலாத்திக் சிந்தனையுடனேயே களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களால் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளுக்கு தீர்வைக் காண முடியுமென்று எதிர்பார்ப்பது எந்தளவிற்கு சாத்தியமென்பது தெரியவில்லை.

ஆகவே தான் தமிழர் தரப்புக்களில் அரசுடன் சேர்ந்தியங்குகின்ற ஒரு சில தரப்புக்களை விட ஏனைய தமிழ்த் தேசிய தரப்புக் கட்சிகளுக்கு இதில் முக்கிய பொறுப்பு சுமத்தப்படுகிறது. அதன் நிமித்தம் அவர்களும் இதுவரை முடிவுகளை எடுக்காத நிலை காணப்படகிறது. இவ்வாறான நிலையிலையே யாரையும் ஆதரித்துப் பலனில்லை என்றும் தமிழர் தரப்பாக அனைவரும் ஒன்றிணைந்த ஒருமித்த முடிவை எடுக்க வேண்டுமென்று பலராலும் கோரப்படுகிறது.

ஏனெனில் தெற்கில் பொதுஐன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபாய மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக சயித் பிரேமதாசா ஆகியொர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஒருவர் வெற்றி பெறப் போகின்றார் எனத் தெரிந்தும் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி தனது கட்சி சார்பில் ஒருவரை வேட்பாளராக நியமித்திருக்கின்றது.

ஆகையினால் இதேபோன்று தமிழ் மற்றும் முஸ்லீம் தரப்புக்கள் இணைந்து அத்தகையதொரு முடிவை எடுப்பது குறித்து பேசப்படுகிறது. ஆனாலும் முஸ்லீம் தரப்புக்கள் இதற்கு இணங்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே தமிழ்த் தரப்புக்கள் அனைவருமாக குறிப்பாக கூட்டமைப்புஇ முன்னணி. கூட்டணி என சம்மந்தன்இ விக்கினேஸ்வரன். கNஐந்திரகுமார் ஆகியோர் இணைந்து அத்தகையதொரு முடிவை எடுக்க வேண்டுமென்ற கருத்து லராலும் முன்வைக்கப்படுகிறது.

ஆக தமிழ் மக்களுக்காகச் செயற்படுவதாகக் கூறிக் கொள்கின்ற இந்தத் தரப்புக்கள் தங்கள் நிலையை வெளிப்படுத்துவதற்காக இணைந்து செயற்படுவார்களா என்பதே இன்றைய கேள்வியாக இருக்கின்றது. அக மொத்தத்தில் இந்த ஐனாதிபதித் தேர்தலிலும் யாரையும் ஆதரித்து ஏமாறாப் பொகின்றனரா அல்லது ஆதரிப்பதனூடாக பிரச்சனைகளைத் தீர்க்கப் போகின்றனரா அல்லது யாரையும் ஆதரித்துப் பலனில்லை என்ற அடிப்படையில் தமிழர் தரப்பாக யாரேனும் ஒருவரை நியமிக்கப் போகின்றனரா என்பது இன்றைக்கு பலர் முன்னாலும் முன்வைக்கப்பட்டுள்ள கேள்வியாக இருக்கின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post