ஈரானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 106 பேர் கொல்லப்பட்டனர் - சர்வதேச மன்னிப்புச்சபை
ஈரானில் எரிபொருள் விலைகள் உயர்வுக்கு எதிராக வெடித்த ஆர்ப்பாட்டங்களில் 21 நகரங்களில் குறைந்தது 106 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபை நேற்று தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள்இ கூரைகளின் உச்சிகளிலிருந்து ஸ்னைப்பர்தாரிகள் சுட்டதாகவும்இ ஒரு தடவை ஹெலிகொப்டரிலிருந்து சுட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை மேலும் கூறியுள்ளது.
எரிபொருள் விலைகளானவை குறைந்தது 50 சதவீதத்தால் உயர்த்தப்படுவதற்காக அறிவிக்கப்பட்டதையடுத்துஇ அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்திருந்தன.
இந்நிலையில்இ ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப் போவதாக கடந்த திங்கட்கிழமை புரட்சிகரக் காவலர்கள் எச்சரித்தையடுத்து ஆர்ப்பாட்டங்கள் நேற்று முன்தினம் அடங்கியதாக ஈரானிய அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.
சாட்சிகளிடமிருந்தான நம்பத்தகுந்த அறிக்கைகள்இ காணொளிகள்இ மனித உரிமைகள் ஆர்வலர்களிடமிருந்தான தகவலிலிருந்து 21 நகரங்களில் குறைந்தது 106 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியிருந்தது.
இதேவேளைஇ உண்மையான உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் எனவும்இ 200 பேரளவில் கொல்லப்பட்டிருக்கலாம் என சில அறிக்கைகள் தெரிவிப்பதாக அறிக்கையொன்றில் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
புலனாய்வுஇ பாதுகாப்புப் படைகள் சடலங்களை அவர்களது குடும்பங்களிடம் வழங்கவில்லை எனவும் ஏனையோரை சடலங்களை சுயாதீனமான மரண விசாரணையொன்று இல்லாமல் விரைவாக சடலங்களைப் புதைக்குமாறு வலியுறுதியதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
இணைய முடக்கத்துக்கு மத்தியிலும் சமூக வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட காணொளிகளில் சில நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நேற்றுமுன்தினமிரவு தொடர்ந்ததுடன் வீதிகளில் பாதுகாப்புப் படைகளின் பலத்த பிரசன்னம் காணப்பட்டது.
இந்நிலையில்இ ஏறத்தாழ 1இ000 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment