பிரித்தானியாவுக்குச் செல்லவிருந்த சரக்குக் கப்பலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 25 அகதிகளை குறித்த கப்பல் நேற்று நெதர்லாந்தை விட்டுச் சென்ற சிறிது நேரத்தில் நெதர்லாந்து அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கப்பலானது விரைவாக விளார்டிங்கனுக்கு திரும்பியதாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.
சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு இரண்டு அகதிகள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில்இ ஏனைய 23 பேரும் மருத்துவ சோதனையொன்றை துறைமுகத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் பொலிஸாரால் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக பிராந்திய அவசர சேவைகளின் திணைக்களத்தில் பிரசுரிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்தவகையில்இ அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியாத நிலையியில்இ அவர்களில் பிரதானமாக இளைஞர்களே இருந்துள்ளனர்.
கப்பலில் நிறுத்தி வைக்கப்பட்ட ட்ரக்கொன்றிலிருந்த குளிரூட்டப்பட்ட கொள்கலலொன்றில் அகதிகளை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்இ ஓட்டுநரைக் கைது செய்துள்ளதாக நெதர்லாந்து தேசிய ஒளிபரப்பு நிறுவனமான என்.ஓ.எஸ்க்கு தெரிவித்துள்ள பொலிஸார் ஆட் கடத்தலில் பங்கேற்றிருக்கலாம் என அவர் விசாரணை செய்யப்பட்டு வருவதாகக் கூறியுள்ளனர்.
Post a Comment