டென்னிஸ் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரோஜர் பெடரர் தனது ஓய்வுக் குறித்து மனம் திறந்துள்ளார் - Yarl Voice டென்னிஸ் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரோஜர் பெடரர் தனது ஓய்வுக் குறித்து மனம் திறந்துள்ளார் - Yarl Voice

டென்னிஸ் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரோஜர் பெடரர் தனது ஓய்வுக் குறித்து மனம் திறந்துள்ளார்


டென்னிஸ் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமைக்குரிய சுவிஸ்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தனது ஓய்வுக் குறித்து மனம் திறந்துள்ளார்.

38 வயதான ரோஜர் ஃபெடரர் தன்னுடைய ஓய்வு குறித்து கூறுகையில்

'என்னுடைய ஓய்வு என்னுடைய உடல்நலனைப் பொறுத்துத்தான் அமையும். தற்போது ஓய்வு பெற வேண்டிய அவசியமில்லை.

35 36 வயதுக்குப் பிறகு விளையாட மாட்டேன் என நினைத்தேன். ஆனால் இன்று வரை விளையாடி வருகிறேன். நல்ல உடற்தகுதியுடன் விளையாடி வருவதால் எப்போது நிறுத்துவேன் எனக் கணிக்க முடியாது.

2009ஆம் ஆண்டு தொடர்ந்து விளையாடுவது குறித்து கேள்வி எழுப்பினேன். இப்போது 10 வருடங்கள் ஆன பிறகும் விளையாடி வருகிறேன். எப்படி முடியப் போகிறது எனத் தெரியாது. ஓய்வு என்பது உணர்வுபூர்வமாகவும் நல்லவிதமாகவும் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

ஆண்டில் நடைபெறும் முக்கிய தொடர்களை மட்டும் தேர்வு செய்து விளையாடும் ரோஜர் பெடரருக்கு இம்முறை சிறப்பான ஆண்டாக அமையவில்லை.

நான்கு முக்கிய கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களில் இம்முறைஇ அவுஸ்ரேலியா பகிரங்க டென்னிஸ் தொடர்இ பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர்இ அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர்இ இந்த மூன்று தொடரிலும் பெரிதும் சோபிக்காத ஃபெடரர்இ விம்பிள்டன் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்விக் கண்டார்.

ஆனால் அண்மையில் தனது 1500ஆவது மைல் கல் போட்டியில் விளையாடி வெற்றிக்கண்ட அவர்இ சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரில் 10ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இதற்கிடையில்இ அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகளவில் சிறப்பாக விளையாடும் 24 அணிகள் பங்கேற்கும் ஏ.டி.பி கிண்ண டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதேவேளைஇ அண்மையில் அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரிலும்இ பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலும் விளையாடுவதற்கு ரோஜர் பெடரர் விருப்பம் தெரிவித்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

ரோஜர் ஃபெடரர்இ இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதில் ஆறு அவுஸ்ரேலிய பகிரங்க சம்பியன் பட்டங்கள் ஒரு பிரான்ஸ் பகிரங்க சம்பியன் பட்டம் எட்டு விம்பிள்டன் சம்பியன் பட்டங்கள் ஐந்து அமெரிக்க பகிரங்க சம்பியன் பட்டங்கள் அடங்கும்.

103 பட்டங்களைப் பெற்றுள்ளார் ரோஜர் ஃபெடரர். 2018 ஜனவரியில் கடைசியாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிற்கு பிறகு ஏழு ஏடிபி சம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post