தேசிய பாதுகாப்பு செலவுகள் பற்றிய பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தென்கொரியா முறுகல் - Yarl Voice தேசிய பாதுகாப்பு செலவுகள் பற்றிய பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தென்கொரியா முறுகல் - Yarl Voice

தேசிய பாதுகாப்பு செலவுகள் பற்றிய பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தென்கொரியா முறுகல்


தென் கொரியாவின் தேசிய பாதுகாப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த 28500 ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்படுவதற்கான செலவைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான சமரசப் பேச்சுவார்த்தை முன்னேற்றமின்றி நிறைவடைந்துள்ளதாக தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சு தகவல் வௌியிட்டுள்ளது.

செலவுப் பகிர்வு உடன்பாட்டில் புதிய அம்சத்தைச் சேர்த்த பின்னர் தென் கொரியா செலுத்தவேண்டிய பங்கைக் கணிசமாய் அதிகரிப்பதற்கு அமெரிக்கா விரும்பம் கொண்டுள்ளது.

அந்த நிலைப்பாட்டை அமெரிக்கா விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டதாக வௌிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால்இ கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்ட செலவுப் பகிர்வு உடன்பாட்டின் அடிப்படையில்இ அந்த உயர்வு இருக்கவேண்டும் என்று தென்கொரியா விரும்பம் வௌியிட்டுள்ளது.

கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்காகவும் தென் கொரியாவிலுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கான செலவை ஈடுகட்டுவதற்காகவும் சியோல் அரசாங்கம் அதிகமான பங்கை வழங்க வேண்டும் என்று அமெரிக்க நிர்வாகம் கோரியுள்ளது.

அதற்காக அடுத்த வருடம் தென் கொரியாஇ கிட்டத்தட்ட 5 பில்லியன் டொலர் செலுத்தவேண்டுமென அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.

இந்த வருடத்துடன் முடிவடையும் செலவுப் பகிர்வு உடன்பாட்டின் கீழ்இ தென் கொரியா 870 மில்லியன் டொலர் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக இருதரப்பு கலந்துரையாடல் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post