ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சிக்கலால் கட்சியிலிருந்து விலகும் உறுப்பினர்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசியலில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு கட்சித் தலைமைப் பதவியையும் எதிர்க் கட்சித் தலைவர் பதவியையும் பெற்றுக்கொடுக்கா விட்டால் இவ்வாறு விலகத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தான் மட்டுமல்லாது மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தத் தீர்மானத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளைஇ ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால்இ தாமும் அரசியலில் இருந்து விலகத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமாச தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியில் தலைமைத்துவம் தொடர்பான முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்இ ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இருக்கும் நிலையில்இ சஜித் பிரேமதாசவுக்கு கட்சியின் தலைமைத்துவத்தை வழங்குமாறு கோரிக்கை வலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment