வடக்கு ஆளுநர் உட்பட அனைத்து ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ஐனாதிபதி உத்தரவு - Yarl Voice வடக்கு ஆளுநர் உட்பட அனைத்து ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ஐனாதிபதி உத்தரவு - Yarl Voice

வடக்கு ஆளுநர் உட்பட அனைத்து ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ஐனாதிபதி உத்தரவு


இலங்கையின் அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட அனைத்து ஆளுநர்களையும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பையடுத்து வடக்கு கிழக்கு உட்பட அனைத்து ஆளுநர்களும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மத்திய மாகாண ஆளுநர் ரஜித கீர்த்தி தென்னகோன்இ ஊவா மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர கிழக்கு மாகாண ஆளுநர் விஜயலால் டி சில்வா வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க வடமேல் மாகாண ஆளுநர் பசேல ஜயரத்ன சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க ஆகியோர் பதவி விலகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post