யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்று புதன்கிழமை இரவு நடந்த விபத்து சம்பவத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-
காங்கேசன்துறை வீதி கொக்குவில் சந்திக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவ நிலையத்தில் பணிபுரியும் முதியவர் தனது வேலையை முடித்துக்கொண்டு தாவடியை நோக்கி சென்றுள்ளார்.
வீதியை கடந்து துவிச்சக்கர வண்டியில் சென்ற அவரை யாழ் நகர் பகுதியில் இருந்து சுன்னாகம் நேக்கி மிக வேகமாக வந்த கார் மோதி தள்ளி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்தவர் காரின் முன்பக்க கண்ணாடியுடன் மோதி தூக்கி வீசப்பட்டார்.
இதன் போது தலையில் படுகாயமடைந்த அவர் அங்கு கூடியவர்களால் மீட்க்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
குறித்த விபத்தினை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே காரை பூட்டிவிட்டு (லொக்) அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிமதிக்கப்பட்டவர். அங்கு உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
விபத்தினை ஏற்ப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியவர் யாழ் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் யாழ் நகரில் உள்ள பிரபல்யமான நகை வியாபார நிலைய உரிமையாளர் என்றும் பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்தனர்.
Post a Comment