தென்கொரியாவினால் விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தது வடகொரியா - Yarl Voice தென்கொரியாவினால் விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தது வடகொரியா - Yarl Voice

தென்கொரியாவினால் விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தது வடகொரியா


தென்கொரியாவினால் விடுக்கப்பட்ட அழைப்பினை வடகொரியா நிராகரித்துள்ளது.

சியோலில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் கலந்துக் கொள்ளுமாறு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னிற்கு தென்கொரியா அழைப்பு விடுத்திருந்தது.

எனினும் குறித்த அழைப்பினை வடகொரிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அதற்கு உகந்த காலப்பகுதி இதுவல்ல எனவும் வடகொரிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ள வடகொரியா குறித்த மாநாட்டில் கிம் ஜொங் உன் கலந்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான சட்டரீதியான காரணங்கள் எதனையும் தங்களால் காண முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post