தனது வாழ்வில் மறக்க முடியாத இரண்டு விசயங்களை வெளிப்படுத்திய டோனி - Yarl Voice தனது வாழ்வில் மறக்க முடியாத இரண்டு விசயங்களை வெளிப்படுத்திய டோனி - Yarl Voice

தனது வாழ்வில் மறக்க முடியாத இரண்டு விசயங்களை வெளிப்படுத்திய டோனி


இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த அணித்தலைவராக பார்க்கப்படும் மகேந்திர சிங் டோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இடம்பெற்ற மிகவும் முக்கியமான இரண்டு தருணங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

'கேப்டன் கூல்' என வர்ணிக்கப்படும் மகேந்திர சிங் டோனி மூன்று ஐ.சி.சி. சம்பியன் கிண்ணங்களை இந்தியா அணிக்காக வென்றுக் கொடுத்த மகத்தான சாதனை வீரராக பார்க்கப்படுகின்றார்.

இந்த நிலையில் அவர் தனது கடந்த காலம் குறித்து மனம் திறந்துள்ளார். இதன்போது அவர் கூறுகையில் 'நான் இங்கு இரண்டு முக்கியமான விடயங்களை சொல்லியாக வேண்டும். தென்னாபிரிக்காவில் கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற ரி-20 உலகக் கிண்ண தொடரை வென்று இந்தியா திரும்பியபோதுஇ மும்பையில் உள்ள மரைன் டிரைவில் நாங்கள் திறந்த வெளி பேருந்தில் உலா வந்தோம். அப்போது அந்த பகுதியே ஸ்தம்பித்தது. காரில் இருந்து பொதுமக்கள் காரை விட்டு வெளியில் இறங்கி நின்றனர்.

ஒவ்வொரு பொதுமக்களின் முகத்திலும் சிரிப்பை பார்த்த நான்இ அதை மிகவும் சிறந்த தருணமாக உணர்ந்தேன். ஏனென்றால்இ கூட்டத்தில் இருந்த ஏராளமான பொதுமக்கள் அவர்களுடைய விமான பயணத்தை தவற விட்டிருக்கலாம்இ முக்கியமான வேலைகள் கூட தடைபட்டிருக்கலாம். நாங்கள் பெற்ற வரவேற்பு மரைன் டிரைவின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை குறையாமல் அப்படியே குறையாமல் இருந்து.

இரண்டாவது நிகழ்வு 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியின்போது நடந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 15-20 ஓட்டங்கள் தேவையிருக்கும்போதுஇ அனைத்து இரசிகர்களுமம் வந்தே மாதரம் என கோசம் எழுப்பினர்.

இந்த இரண்டு தருணங்கள் மீண்டும் பிரதிபலிப்பது மிகவும் கடினம். இரண்டு எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான தருணங்கள்' என கூறினார்.

டோனி தலைமையில் இந்தியா அணிஇ 2007ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ணத்தையும் 2011ஆம் ஆண்டு 50 ஓவர்கள் கொண்ட உலகக்கிண்ணத்தையும் 2013ஆம் ஆண்டு ஐ.சி.சி. சம்பியன்ஷிப் கிண்ணத்தையும் வென்றுக் கொடுத்துள்ளார். அத்தோடு ஆசியக் கிண்ணத்தையும் வென்றுக் கொடுத்துள்ளார்.

38 வயதான டோனிஇ இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண தொடரில் நியூஸிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் இறுதியாக விளையாடி இருந்தார்.

அதன்பிறகு எவ்வித கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத டோனி ஓய்வு காலத்தில் இந்தியா இராணுவத்துடன் இணைந்து நாட்டுக்காக சேவையாற்றினார்.

தற்போது அவரின் ஓய்வு எப்போது என்ற கேள்வி அனைவரினதும் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் உத்தியோகபூர்வமான அறிவிப்பேன் என டோனி அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஒட்டுமொத்த கிரிக்கெட் இரசிகர்களையும் கொண்டாட வைக்கும் வகையில்இ ஆசிய பதினொருவர் நட்சத்திர அணிக்கும் உலக பதினொருவர் நட்சத்திர அணிக்குமிடையிலான போட்டித் தொடரில் ஆசிய பதினொருவர் நட்சத்திர அணிக்காக விளையாடுவதற்கு மகேந்திர சிங் டோனிக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post