ஜஸ்பிரிட் பும்ரா - ட்ரென்ட் போல்ட் ஜோடி பந்துவீச்சு கூட்டணி அபாயகரமானது - மகேல
ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ட்ரென்ட் போல்ட் ஜோடி எதிர்வரும் தொடரில் அபாயகரமான கூட்டணியாக இருக்கும் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். ரி-20 தொடருக்கான தயார்படுத்தல்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிஇ அண்மையில் 10 வீரர்களை விடுவித்தது. இதற்கு பதிலாக டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்களான ட்ரெண்ட் போல்ட் மற்றும் தவல் குல்கர்ணியை தேர்வு செய்தது.
இந்த நிலையின் இவர்களின் தேர்வு குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன கூறுகையில்இ 'ஜேசன் பெரெண்டர்ஃப் அணியில் வைத்து எப்படி செயற்படுத்துவது என்பது எங்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்தது. அவருக்குப் பதிலாக மாற்று வீரரை தேட வேண்டியிருந்தது. கடந்த முறை எங்களுக்காக பெரெண்டர்ஃப் சிறப்பாக விளையாடியிருந்தார்.
டெல்லி அணி ட்ரென்ட் போல்ட்யை விடுவிக்கின்றது என்ற செய்தி வந்தபோதுஇ அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர் என நாங்கள் உணர்ந்தோம். பும்ரா உடன் இணைந்து அவர் பந்து வீசினால் இந்த ஜோடி மிகவும் அபாயகரமானது' என கூறினார்.
முதுகு வலி காரணமாக சமீபகாலமாக அவதிப்பட்டு வந்த சகலதுறை வீரர் ஹார்திக் பாண்ட்யாவுக்குக் கடந்த மாதம் லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. பும்ராவுக்கு அவரது கழுத்தின் கீழ்பகுதியில் முறிவு இருந்தது. இதனால் அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
Post a Comment