மாநிலங்களுகு அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் வைகோ - Yarl Voice மாநிலங்களுகு அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் வைகோ - Yarl Voice

மாநிலங்களுகு அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் வைகோ


மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும் என்று ம.தி.மு.கவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ தனிநபர் சட்டமூலம் ஒன்றை சமர்பித்துள்ளார்.

குறித்த சட்டமூலதை வைகோ நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த  சட்டமூலத்தில்  மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும். அத்துடன் தற்போது வரை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு கொண்டு சென்ற பிரிவுகளை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர்இ 'என்னுடைய கட்சியின் கொள்கையே கூட்டாட்சி தத்துவத்தையும் உணர்த்துவதாகும். அத்துடன் மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தை அளிப்பது ஆகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதுவரை 103 முறை திருத்தப்பட்டுள்ளது. அவற்றில் சில கூட்டாட்சி தத்துவங்களை சிதைக்கும் வகையில் இருந்துள்ளன.

அதாவது கல்விஇ காடுகள்  மக்கள்தொகை குறைப்பு  நீதி வழங்குதல் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களை நிர்வகித்தல் ஆகிய பிரிவுகள் பொது பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தப் பிரிவுகள் மீண்டும் மாநில பட்டியலுக்கு திரும்ப வேண்டும். அத்துடன் தற்போது மத்திய பட்டியலில் உள்ள இதர அதிகாரங்கள் என்ற பிரிவை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும்' எனத் தெரிவித்தார்.

வைகோவின் இந்த சட்டமூலம் மீதான விவாதத்தில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள்  மாநில அதிகாரங்களை விரிவுபடுத்த வேண்டும்' என்ற கோரிக்கையை இதன்போது முன்வைத்துள்ளனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post