ஐனாதிபதி மாளிகை வேண்டாம், சொந்த வீட்டில் தங்கும் கோத்தபாய - Yarl Voice ஐனாதிபதி மாளிகை வேண்டாம், சொந்த வீட்டில் தங்கும் கோத்தபாய - Yarl Voice

ஐனாதிபதி மாளிகை வேண்டாம், சொந்த வீட்டில் தங்கும் கோத்தபாய


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக்காலத்தில் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ வதிவிடமான ஜனாதிபதி மாளிகையிலோ அல்லது வேறு அரசாங்க வதிவிடங்களிலோ குடியேறுவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.

நுகேகொட மீரிஹெனவில் உள்ள அவரது சொந்த வீட்டிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க விவகாரங்களை நிறைவேற்றுவதற்கு மாத்திரமே ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தப் போவதாகவும் வேறு எந்த அரசாங்க வதிவிடங்களும் தனக்கு தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி செயலக ஆளணியை 2500இல் இருந்து 250 பேராக குறைக்க உத்தரவிட்டார்.

அத்துடன் தமது பாதுகாப்பு வாகன அணியின் எண்ணிக்கையைக் குறைக்குமாறும் பயணங்களின்போது வீதித்தடைகளை ஏற்படுத்தக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post