நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா? - Yarl Voice நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா? - Yarl Voice

நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா?


நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவே கொண்டாடும் பெரிய நாயகி. அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியான நாயகியாக வலம் வருகிறார்.

அண்மையில் இவரது பிறந்தநாள் அவரது ரசிகர்களால் அமோகமாக கொண்டாடப்பட்டது. அவரும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தனது பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடினார்.

அந்த புகைப்படங்களை நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம். நயன்தாரா அண்மையில் கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்ட படம் மூக்குத்தி அம்மன்.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இப்படத்தின் மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுவரை ரூ. 5 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நயன்தாரா இந்த படத்திற்கு ரூ. 8 கோடி சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
Previous Post Next Post