புதிய ஐனாதிபதியாக பதவியேற்றதும் கோத்தபாயவின் அதிரடி உத்தரவுகளால் பலரும் அதிர்ச்சி
ஸ்ரீலங்காவின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சில அதிரடி முடிவுகளை அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புக்களாவன
தனது பாதுகாப்பிற்கு இரு வாகனங்கள் இருந்தால் மட்டும் போதும் என்றும் தான் பயணம் செய்யும் போது வீதிகளை மூட வேண்டாம் என்றும் ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியின் ஊழியர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இவ்வளவு காலமாக செயற்பட்டுவந்த பல ஊழியர்கள் குறைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 1200ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 200ஆக குறைக்கப்பட்டுள்ளது. அத்தோடு தனது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களையும் குறைத்துள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment