டெஸ் போட்டிகளில் விராட் ஹோலி புதிய மைல்கல்
அணித் தலைவராக குறைந்த இன்னிங்ஸில் 5000 டெஸ்ட் ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனையை இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி படைத்துள்ளார்.
இதன்மூலம்இ குறைந்த இன்னிங்ஸில் 5000 ஓட்டங்கறை எட்டிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணிஇ 106 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெற்றுக்களையும் இழந்தது.
இந்நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வருகிறது. இதில் துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி 32 ஓட்டங்களை எடுத்த நிலையில் இந்த புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்த வரிசையில் விராட் கோலி 86 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அதேபோல் ரிக்கி பொண்டிங் 97 கிளைவ் லாய்ட் 106 கிரீம் ஸ்மித் 110 ஆலன் பார்டர் 116 மற்றும் ஸ்டீபன் பிளெமிங் 130 டெஸ்ட் போட்டிகளில் 5000 ஓட்டங்கள் என்ற மைல் கல்லை எட்டியுள்ளனர்.
இதேவேளை அணித்தலைவராக குறைந்த இன்னிங்ஸில் (65 இன்னிங்ஸ்) 4000 டெஸ்ட் ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோஹ்லி தன்வசப்படுத்தியுள்ளார்.
Post a Comment