மாவீரர் தினத்தை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்போம் - கடிநாயை உசுப்பிவிட்டு கடிவாங்குவது எமது நோக்கமல்ல - சிறிதரன் எம்பி
மாவீரர் நாளை உணர்பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு உறவினர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்ற நிலையில் இதனை நீங்கள் தடுத்து விடுங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று ஆட்சியாளர்களுக்கு சவால் விடுப்பது பொருத்தமானதல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடி நாயை உசுப்பிவிட்டு கடிவாங்குவது எமது நோக்கமல்ல என தெரிவித்துள்ளார்.
யாழிலுள்ள தனது இல்லத்தில் இன்று காலை ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். இதன் போது மாவீரர் தினம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
மாவீரர் நாளை நினைவு அனுஷ்டிக்கும் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள். இதற்கமைய இப்பொழுது இருக்கின்ற சூழலிலே துயிலும் இல்லங்களில் மாவீர்களுடைய பெற்றோர்கள் உரித்துடையவர்கள் பொது மக்கள் எனப் பலரும் ஒன்றாக அங்கு சிரமதானப் பணிகள் துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதனடிப்படையில்; மாவீரர் நாளான நவம்பர் 27 ஆம் திகதி தங்கள் உறவுகளுக்காக விளக்கேற்றி வணங்குகின்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான சகல நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆக உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூருவதற்கு மக்கள் பல இடங்களிலும் தயாராகியுள்ளனர்.
இந்த நிலையில் ஐனாதிபதி தேர்தல் காலத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அனுமதிக்கப் போவதில்லை என சொல்லியதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. ஆனால் அதன் பிற்பாடு அவ்வாறு தான் சொல்வில்லை என்றும் ஒரு செய்தி வெளிவந்தது.
இவ்வாறான நிலைமையில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுவதை இதுவரை யாரும் எதவும் தடுத்ததில்லை. நாங்களும் யாரையும் வலிந்த இழுத்து நீங்கள் தடத்த விடுங்கள் அல்லது சவால் விடுகின்றொம் என்ற செய்திகளைச் சொல்வதற்கும் தயாரில்லை.
எங்களைப் பொறுத்தவரைய மிக நிதானமாக பொறுமையோடு பொறுப்பொடு இறந்த போன எங்கள் உறவுகளுக்கு அ;சலி செலுத்துகின்ற அந்த மக்களுடைய உணர்வுகளை மதித்து மிக தெளிவாக நிதானத்தோடு எமது பணிகளைச் செய்து வருகிறோம்.
அந்தக் கருமங்களை மக்கள் தாங்கள் ஆற்றுவார்கள். ஆனால் அவ்வாறு கருமங்கள் ஆற்றுகிற பொழுது தடைகள் வந்தால் அந்த இடத்தில் இதனைப் பற்றி பரிசீலிப்பது பொருத்தமானதாக இருக்கும். அதைவிடுத்து நாங்கள் முற்கூட்டியே நாங்கள் சவால்கள் விடுவதை தவிர்த்துக் கொள்வது தான் பொருத்தம். ஆகவே நங்கள் சவால்களை விடுவது முக்கியமல்ல. கடி நாயை உசுப்பிவிட்டு கடிவாங்குவது எமது நோக்கமல்ல என்றார்.
Post a Comment