யாழ் மாநகரத்தை முன்னேற்ற ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் - முதல்வர் ஆர்னோல்ட்
2020ஆம் ஆண்டு பாதீடு தொடர்பாக இன்றைய அமர்வில் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட் விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார்.
அறிமுகம்
2020 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை முன்மொழிவதில் மகிழ்ச்சிடைகின்றேன். இந்த பாதீடானது மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் நலன்களை அடிப்படையாகக் கொண்ட வெற்றிகரமான ஒன்றாகவும் அடுத்த ஆண்டு எமது மாநகரம் தற்போயை நிலையிலிருந்து கணிசமான முன்னேற்றத்துடன் முன்னோக்கி நகர்ந்த ஓர் ஆண்டாக மாறுவதற்கு முக்கிய பங்கை வகிக்கும் ஒன்றாகவும் மாற வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கின்றேன். அதேவேளை இந்த பாதீட்டை தயாரிப்பதில் ஒத்துழைத்த அனைவருக்கும் ஆரம்பமாக நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முதற்கட்டமாக யாழ் மாநகரம் ஏனைய மாநகரங்களுக்கு ஈடான ஒரு மாநகரமாகவும் எமது அனைவரினதும் ஒன்றித்த செயற்பாடுகளினூடாக மிகக் குறுகிய காலத்திட்குள் அந்நகரங்களுக்கு உதாரணமான ஒரு நகரமாகவும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது எல்லோரினதும் அவா என்று கருதுகின்றேன். இவ்வருடம் நாம் தீர்மானிக்கும் விடயங்கள் இச்செயற்பாட்டை செய்து முடிப்பதற்கான நல்ல ஆரம்பத்தினை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்போடு இந்த பாதீடு முன்மொழியப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டில் நிறைவேற்றுவதென எம்மால் முன்மொழியப்பட்ட விடயங்களில் பிரதானமான பல விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றை பின்வருமாறு குறிப்பிட முடியும்.
1. மாநகர ஊழியர்கள் அனைவரும் வினைத்திறன்மிக்க சேவையினை வழங்குவதற்கான வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் கட்டமைப்புக்களை உருவாக்கி அதனூடாக மக்களுக்கு சிறந்த சேவைகள் கிடைப்பதை உறுதிபடுத்தும் வகையில் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் சில மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2. எம்மால் கடந்த முறை குறிப்பிடப்பட்டதற்கமைவாக மாநகரத்துக்கான புதிய கட்டிடத் தொகுதியின் நிர்மாண வேலைகள் தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கட்ட கலந்துரையாடல்களுக்கு அமைவாக 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினூடாக 4 கட்டங்களாக ரூபா 2350 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்பொழுது முதலாம் கட்ட வேலைத்திட்டங்கள் ரூபா 700 மில்லியன் ஒதுக்கீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எமது மாநகரக் கட்டடத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதற்கு பல வழிகளிலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மாநகர முதல்வர் என்ற வகையில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
3. பிரட்டு நிலையங்களை அபிவிருத்தி செய்து மாநகர திண்மக் கழிவு முகாமைத்துவத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் பிரட்டு நிலையங்கள் 09 ஆக அதிகரிக்கப்பட்டு மூன்று வட்டாரங்களுக்கு ஒரு பிரட்டு நிலையம் என்ற அடிப்படையில் சகல வசதிகளுடனும் விருத்தி செய்யப்பட்டு அதனூடாக அந்த வட்டாரங்களின் அனைத்து செயற்பாடுகளையும் ஒழுங்குபடுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கும் வகையில் புதிய இரண்டு பிரட்டு அலுவலகங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
4. மாநகர சந்தைகள் நீண்ட காலமாக புனரமைக்கப்படாது காணப்பட்டு தற்போது அவை நவீன முறையில் திருத்தியமைக்கப்பட்டு மாநகர மக்களுக்கும் ஏனையோருக்கும் சிறந்த சேவையை வழங்குவதற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் நோக்கில் ரூபா 30 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் (சபை நிதிஇ முத்திரை தீர்வை நிதிஇ குறித்தொதுக்கப்பட்ட நிதி மற்றும் ழுNருசு நிதி என்பவற்றிற்கூடாக) பாசையூர் மற்றும் செங்குந்தா சந்தைகள் புனரமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில சந்தைகள் புனரமைக்கப்பட வேண்டியுள்ள நிலையில் உள்ளமையினால் அவை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
5. எம்மால் ஏற்கனவே முன்மொழியப்பட்டதற்கமைய இறைச்சிக் கடைகளை நவீன முறையில் புனரமைத்து நவீனமயப்படுத்தி சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவது என்ற திட்டத்திற்கு அமைவாக குருநகரஇ நாவாந்துறை மற்றும் பாசையூர் சந்தைத் தொகுதிகளுடன் அமையப்பெற்றுள்ள இறைச்சிக் கடைகள் முத்திரை வரி (குறித்தொதுக்கப்பட்ட நிதி) ஊடாக ரூபா 8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பனரமைக்கப்பட்டுள்ளது. குறித்த மாற்றம் மாநகர மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.
6. நவீன சந்தைக் கடைத் தொகுதியிலுள்ள கடைகளுக்கான வாடகைகளை உரிய முறையில் தீர்மானித்து அறவிடுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதுடன்இ அதுனூடாக பெறப்படும் வருமானங்களை சரியான முறையில் ஒழுங்குபடுத்துவதற்குரிய முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
7. சிற்றங்காடி கடைகள் உரிய முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதுடன் அவை உரிய முறையில் மேற்பார்வை செய்யப்பட்டுவருகின்றது.
8. மாநகர வீதிகளில் 75 வீதிகளை புனரமைப்பது என்பது கடந்த பாதீட்டில் எம்மால் குறிப்பிடப்பட்டிருந்தது. மாநகர எல்லைக்குள் பல வருடங்களாக புனரமைக்கப்படாத பல வீதிகள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ. சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான கம்பெரலிய திட்டத்தின் ஊடாக 180 வீதிகள் 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.
9. மேலும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஈ. ச ரவணபவன் அவர்களின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான கம்பெரலிய திட்டத்தின் ஊடாக மாநகர எல்லைக்குள் 54 வீதிகள் 58 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது.
10. அத்துடன் சபை நிதி ஊடாக (வட்டாரங்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம்) பல வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளமையும் இங்கு நினைவுபடுத்தற்குரிய விடயமாகும்.
11. கடந்த பாதீடு முன்மொழிவுகளுக்கு அமைய மாநகர வாய்க்கால்கள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ. சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான கம்பெரலிய திட்டத்தின் ஊடாக மழை காலங்களில் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்படும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் 28 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 19 வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
12. ளுஊனுP திட்டத்தை துரிதப்படுத்துவதற்கான பல்வேறு உயர் மட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.
13. ஏநசவiஉயட டீரடைனiபெ வேலைகளை துரிதப்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன..
14. துயககயெ ஊரடவரசயட ஊநவெநச தொடர்பாக பல கலந்துரையாடல்கள் இந்தியத் தூதரகத்துடன் இடம்பெற்றிருக்கின்றது. அதனை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து உரிய தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளோம். இந்திய அரசின் 13 மில்லியன் அமெரிக்க டொலர் (2500 மில்லியன்) நிதி ஒதுக்கீட்டில் மேற்படித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் பணிகள் தற்பொழுது நிறைவுறும் கட்டத்தை எட்டியுள்ளது.
15. மாநகர எல்லைக்குள் சந்தைக் கட்டடத்தொகுதிகளோடு உள்ள பொது மலசல கூடங்கள் பல நவீன முறையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ளுஊனுP திட்டத்தின் ஊடாக யாழ் மாநகரின் செங்குந்தா சந்தைஇ நவீன சந்தை மற்றும் குருநகர் சந்தை ஆகிய இடங்களில் உள்ள பொது மலசல கூடங்கள் 18.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கம்பெரலிய திட்டத்தின் ஊடாக யாழ் மாநகரத்திற்குற்பட்ட 19 பாடசாலைகளில் 19 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் சில மலசல கூடங்கள் புதிதாகஅமைக்கப்பட்டிருப்பதுடன் பல மலசலகூடங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
16. மாநகரின் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் குறிப்பாக மாநகர பூங்காக்களை மையப்படுத்தி சுற்றுலா மையங்களாக ஒழுங்கமைக்கும் வகையிலும் உள்ளூர் வெளியூர் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையிலும் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுக்கும் வகையில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ. சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான கம்பெரலிய திட்டத்தின் ஊடாக யாழ் மாநகர பூங்காக்களான சுப்ரமணியம் பூங்கா 1 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டிலும் பழைய பூங்கா 1 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டிலும் அழகுபடுத்தப்பட்டுள்ளதுடன் மாநகரசபை எல்லைக்குள் அமையப்பெற்றுள்ள விளையாட்டுக்கழகங்களினதும் சனசமூக நிலையங்களினதும் 20 பூங்காக்கள் 12.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்படி கம்பரெலிய திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
17. மாநகரத்துக்குற்பட்ட மைதானங்கள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ. சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான கம்பெரலிய திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பழைய பூங்காவுடன் இணைந்து அமைந்துள்ள கூடைப்பந்தாட்ட மைதானம் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டிலும்இ மாநகரத்திற்குற்பட்ட பாடசாலைகள்இ விளையாட்டுக் கழகங்களின் 30 மைதானங்கள் 29.7 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது.
18. மாகாண மற்றும் மத்திய அரசின் அமைச்சுகள் திணைக்களங்களுடன் சீரிய உறவைப் பேணி அவர்களுக்கூடாக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களையும் வேலைத்திட்டங்களையும் யாழ் நகரை மையப்படுத்தி முன்னெடுத்திருக்கின்றோம்.
அவற்றுள் ஒன்றுதான் யாழ் நகர் முனீஸ்வரன் வீதியில் அமையப்பெற்றுள்ள வெளி மாவட்டங்களுக்கான பயணத்திற்கான (நெடுந்தூரப் பயணத்திற்கானது) பேரூந்து சேவைகளை ஒழுங்கமைக்கும் பேரூந்து நிலையம் பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் 100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டு தற்பொழுது நிறைவுக்கட்;டத்தை அடைந்துள்ளது. அத்துடன் முனீஸ்வரன் வீதியும் நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
19. தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நகர அபிவிருத்தி மற்றும் நகரை அழகுபடுத்தும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடாத்திவருகின்றோம். அதன் ஊடாக பல்வேறு திட்டங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்.
20. மாநகரத்தின் அழகினை பேணும் நோக்கில் Pழளவநச டீழயசன களை நிறுவி மதில்களிலும் சுவர்களிலும் விளம்பரங்கள் ஒட்டப்படுவதை சுற்றுச் சூழல் பொலிசாரின் உதவியுடன் முற்றாக தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம்.
இது தொடர்பான அறிவித்தல்களும் கடிதங்களும் உரிய தரப்பினர்க்கு வழங்கப்பட்டிருப்பதுடன்இ இது தொடர்பில் மாநகரசபையின் உரிய தரப்பினர் சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றனர்.
21. யாழ்ப்பாண நகரின் சின்னமாக விளங்கும் யாழ் பொது நூல் நிலையத்தினை அபிவிருத்தி செய்தல் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்களை பல தரப்பினருடன் நடாத்தியிருக்கின்றோம்.
அதில் ஓர் அங்கமாக டுகைவ (மின்தூக்கி) பொருத்துவது தொடர்பில் பிரதம அமைச்சர் யாழ் வருகைதந்திருந்த போது அவர்களுடன் கலந்துரையாடியிருந்தோம். அக் கலந்துரையாடலுக்கு அமைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 12.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த வேலைத்திட்டம்; ஆரம்பிக்கட்டுள்ளது.
22. மயானங்கள் சேமக்காலைகளை ஒழுங்குபடுத்தி விருத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
23. தேசிய ஒற்றுமைப்பாடுகள் மற்றும் நல்லிணக்க அமைச்சின் 5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பாசையூரில் வலை திருத்தும் மண்டபம் அமைக்கப்பட்டு தொழிலாளர்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது.
24. தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பணியகத்தினால் ஒன்றினைந்த கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கட்டட அமைப்பிற்காக கோரப்பட்ட 33.0 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 1ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 6.2 மில்லியன் நிதியில் குருநகர் மீன் உப்பிட்டு பதன் படுத்தப்படும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 2ஆம் கட்டமாக 11 மில்லியனுக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
25. குருநகர் பகுதியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 75 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் உயர்பெறுபேறுகளைக் கொண்ட பாரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தின் மூலம் பல தொழிலாளர்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
26. ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலனாக 4 வாகனங்கள் மாநகரத்திற்கு கிடைக்கப்பெறவுள்ளன.
27. பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புக்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய உலக வங்கியின் 118.82 மில்லியன் பெறுமதியான பல புதிய வாகனங்கள் மாநகர சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
குறிப்பு:- 2019 ஆம் ஆண்டுக்காக மாநகரசபை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வட்டாரங்களுக்காக 81 மில்லியன் மற்றும் திண்மக்கழிவகற்றல் திட்டத்திற்காக 30 மில்லியனும் ஒதுக்கீடு செய்து மொத்தமாக 111 மில்லியன் மாத்திரமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும் சபை நிதிக்கு மேலதிகமாக எமது கடுமையான முயற்சின் பலனாகவும் பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புக்களின் பலனாக மத்திய அரசின் நிதி மூலமும் மாகாண அரசின் நிதி மூலமும் மற்றும் ஏனைய நிறுவனங்களின் மூலமும் சபை நிதிக்கு மேலதிகமாக 725.22 மில்லியனுக்கான வேலைத்திட்டங்கள் எமது மாநகர சபைக்குள் இடம்பெற்றிருக்கின்றது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன்.
மாநகரசபையின் உறுப்பினர்கள் என்ற வகையில் நாமும் எமது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கின்ற மாநகரின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரும் இதனையிட்டு மிகுந்த மகிழ்சியடையக்கூடிய வகையில் இவ்வருட செயற்பாடுகளும் வேலைத்திட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றது என்பதை இங்கு பதிவு செய்து கொள்கின்றேன்
2020 ஆம் ஆண்டின் பிரதான நோக்கங்களாக பின்வருவனவற்றை முன்மொழிகின்றேன்.
1. யாழ் மாநகரை பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனை அற்ற மாநகரமாக ஒழுங்கமைப்பதற்காக இவ்வாண்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற ஆரம்பத்தின் தொடர்ச்சியுடன் சிறந்த முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தி பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையை முற்றாகத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.
2. பொலித்தீன் பாவனையை தடை செய்யும் அதே சமயம் அதற்கு பிரதியீடான பாவனைக்காக உள்ளுர் உற்பத்திகளான கடதாசிஇ துணிப்பைஇ பனை மற்றும் தென்னையிலான பைகள் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஊக்குவிப்பை மாநகரத்தின் ஊடாக வழங்குதல். இதனை சிறந்த முறையில் ஊக்குவிக்கின்ற பொழுது உள்ளு10ர் மற்றும் சர்வதேச ரீதியில் உள்ளூர் உற்பத்திக்கான கேள்வி அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
3. மாநகரத்தின் பசுமையை உறுதி செய்ய 25000 மரக்கன்றுகளை தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நடுதல்.
4. சூழல் நேயமிக்க மின்மூலமான சூரிய மின்கல பாவனையை முதற்கட்டமாக யாழ் பொது நூலகத்தில் அமைக்க நடவடிக்கை எடுத்தல்.
5. யாழ் மாநகரத்தை சிறந்த நகரமாக ளுஅயசவ ஊவைல (மிடுக்குடைய நகரம்) கட்டியெழுப்புவதற்காக புதிய புதிய சிந்தனைகளுடன் கூடிய விடயங்களை அவதானித்து அதனை மையமாகக் கொண்டு சிறந்த செயற்பாடுகளை மேற்கொள்ள இலங்கையிலுள்ள ஏனைய உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சர்வதேச ரீதியில் ஏனைய நாடுகளில் உள்ள நகர அமைப்புக்களை பார்வையிட்டு அறிந்து கொள்வதற்கு கௌரவ மாநகர உறுப்பினர்களுக்கு தேவையான வழிவகைகளை ஏற்பாடு செய்து கொடுத்தல்.
6. வட்டாரங்களுக்கு இம்முறை ரூபா 4 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
7. திண்மக் கழிவகற்றலை வட்டார ரீதியாக சிறந்த முறையில் அனைத்து உறுப்பினர்களினுடைய ஒத்துழைப்புடன் ஒழுங்குபடுத்தி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தல்.
8. மாநகரின் பாதாள சாக்கடைத் திட்டம் ( ளுநறயபந ) தொடர்பில் யுகுனு நிறுவனத்துடன் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டிருக்கின்றோம். அதன் தொடர்ச்சியாக அதனை நடைமுறைப்படுத்துதல்.
9. யாழ் மாநகர புதிய கட்டட பணிகளை தொடர் கண்காணிப்பு செய்வதுடன்இ முழுமையாக கட்டி முடிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்;தும் முன்னெடுத்தல்.
10. 2019 ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட திட்டங்களை தொடர் கண்காணிப்பு செய்தல்
2020 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் வருமான சுருக்கம்
புதிய நடைமுறைகளை அமுல்படுத்துவதன் மூலம் 2020ஆம் ஆண்டுக்கான சொந்த வருமானமாக ரூபா 627.313 மில்லியன் மதிப்பிடப்பட்டிருக்கின்றது. இப்பாதீட்டின் மூலம் ஏழு பிரதான தலைப்புக்களினூடாக வருமானங்களும் ஒன்பது பிரதான தலைப்புக்களினூடாக செலவுகளும் அடையாளப்படுத்தப்பட்டு முன்மொழியப்பட்டிருக்கிறது. அத்துடன் கடந்தாண்டு வருமானம் மற்றும் செலவுகளுடன் ஒப்பிட்டு பல மாற்றங்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன் முழு விபரம் கௌரவ உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டிருப்பதோடு பார்வைக்காக பொது இடங்களிலும் வைக்கப்பட்டிருந்தன.
எதிர்பார்ப்பும் முடிவும்
எமது வருமானத்தில் பெரும்பகுதி எமது மாநகரத்து மக்களிடமிருந்துதான் பெறப்படுகின்றது. அவை இம்மாநகரத்தின் அபிவிருத்திக்கே முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். யாழ்ப்பாணம் என்பது தமிழர்களின் அடையாளம். தமிழர்களின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். வடக்கு மாகாணத்தின் ஒரே மாநகரம். எமது மாநகரம் உலகில் காணப்படும் ஏனைய மாநகரங்களுடன் ஒப்பிடப்படும் அளவுக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
எமது செயற்பாடுகள் பாதைகளை ஒளிரச் செய்வதிலும் வடிகால்களை துப்பரவு செய்வதிலும் மட்டுப்படுத்தப்பட்டு விடாது ஒரு மாதிரி மாநகரமாக மாற்றப்படுவதற்கான திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுவதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபட வேண்டும். ளுஊனுP திட்டத்தினூடாக பல முன்னேற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு அத்திட்டத்தினை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மாநகர அபிவருத்திக்கான நீண்டகால திட்டம் ஒன்றும் வகுக்கப்பட வேண்டி தேவையும் இருக்கிறது.
இவ்வாறான பாரிய பொறுப்புக்கள் எம்மிடம் தரப்பட்டிருக்கின்றன. எனவே இவற்றுக்கான ஆரம்பமாகவே இப்பாதீட்டை நான் இந்த உயரிய சபைக்கு முன்மொழிகின்றேன். இம்முன்மொழிவு உங்கள் அனைவரினதும் அங்கீகாரத்துடனும் ஆசீர்வாதத்துடனும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற எதிர்பார்க்கின்றேன்.
Post a Comment