கடந்த அரசின் நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிராக வடக்கு சுகாதார தொண்டர்கள் யாழில் போராட்டம் - Yarl Voice கடந்த அரசின் நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிராக வடக்கு சுகாதார தொண்டர்கள் யாழில் போராட்டம் - Yarl Voice

கடந்த அரசின் நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிராக வடக்கு சுகாதார தொண்டர்கள் யாழில் போராட்டம்


கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தின் பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்திற்கு முன்னால் குறித்த  கவனயீர்ப்பு போராட்டம் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அண்மையில் சுகாதார தொண்டர்களாக பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோதுஇ ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக மீண்டும் நேர்முகத்தேர்வு இடம்பெற்று தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிதாக பதவியேற்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அனைத்து புதிய நியமனங்களும் இரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டதை அடுத்து அனைத்து நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்துக்கான கடிதம் அவர்களது முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் இன்றைய தினம் கடமையை பொறுப்பேற்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் நிர்வாகத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக குறித்த கடிதங்கள் நியமனதாரர்களுக்கு அனுப்பபட்டதாகவும் தற்போது அரச சுற்றுநிரூபத்தில் நிறுத்தும்படி அறிவிக்கப்பட்டதன் காரணமாக குறித்த நியமனத்திற்கு கையெழுத்திட அனுமதிக்க முடியாது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்ததை அடுத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றுள்ளார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post